வாத்தி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணனன் வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் உண்டோ அதேபோல சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவானி நாராயணன்.

இதனைத் தொடர்ந்து அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் மட்டும் நடிக்காமல் ஜோடி பன் அன்லிமிட்டட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது இரட்டை நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக இரட்டை ரோஜா என்ற சீரியலில் தற்பொழுது நடித்து பிரபலம் அடைந்து வருகிறார்.

சின்னத்திரை மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்களில் இவரும் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டவர்.

இந்தநிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் சிவானி நாராயணன். அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ வந்த வீடியோ

Leave a Comment