ajith1-tamil360newz

அஜித்தின் பிறந்தநாளுக்கு நடனத்தின் மூலம் வாழ்த்து கூறிய தொகுப்பாளினி.! வைரலாகும் வீடியோ

vj Bhavana dance video: பாவனா ஆர்ஜே வாக பிரபல ரேடியோ ஸ்டேஷனான 104.8 எஃப் எம்மில்பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், விஜய் டிவி ஆனுவல் அவார்ட் மற்றும் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். பின்னர் இதனைத் தொடர்ந்து இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக  வீட்டிலேயே முடங்கியுள்ள அஜித் ரசிகர்கள், மற்றும் திரைப்பிரபலங்கள் அஜித்தின் பிறந்த நாளுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாகவோ அல்லது வீடியோக்களாகவோ பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தொகுப்பாளினி பாவனா அஜித்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அவர் நடித்த விவேகம் படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்வைவா என்ற பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி தல அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அஜித் ரசிகர்கள் பாவனாவின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்திற்காக அவரை பாராட்டியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://twitter.com/tamil360newz/status/1256510661812600832?s=20

Poonam-Bajwa-tamil360newz

பூனம் பஜ்வாவின் வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!! இவருக்கா, இப்படி ஒரு நிலமை!!

Actress Poonam bajwa video:பூனம் பஜ்வா தமிழில்  இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் முதலில் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதை தொடர்ந்து அவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி என் 3, அரண்மனை 2, முத்தின கத்தரிக்கா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போதுதெல்லாம் இவர் படங்களில் துணை நடிகையாகவும்,  கவர்ச்சி காட்டியும், சில படங்களில் கெஸ்ட் ரோலிலும்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வந்த  நிலையில் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது  தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தமிழில் இவருக்கென சில ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.

தற்போது இவர்  உள்பாவாடை விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என கதறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.