அஜித்தின் பிறந்தநாளுக்கு நடனத்தின் மூலம் வாழ்த்து கூறிய தொகுப்பாளினி.! வைரலாகும் வீடியோ

0

vj Bhavana dance video: பாவனா ஆர்ஜே வாக பிரபல ரேடியோ ஸ்டேஷனான 104.8 எஃப் எம்மில்பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், விஜய் டிவி ஆனுவல் அவார்ட் மற்றும் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். பின்னர் இதனைத் தொடர்ந்து இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக  வீட்டிலேயே முடங்கியுள்ள அஜித் ரசிகர்கள், மற்றும் திரைப்பிரபலங்கள் அஜித்தின் பிறந்த நாளுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாகவோ அல்லது வீடியோக்களாகவோ பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தொகுப்பாளினி பாவனா அஜித்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அவர் நடித்த விவேகம் படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்வைவா என்ற பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி தல அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அஜித் ரசிகர்கள் பாவனாவின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்திற்காக அவரை பாராட்டியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.