முத்து, ஆளவந்தான் படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித் படம்.. எது தெரியுமா.?

Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி பிளாக் பஸ்டர்ஹிட் அடித்தது. இப்போ மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க அவருடன் இணைந்து திரிஷா ரெஜினா ஆரவ் அர்ஜுன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருவதால் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு பயத்தை காட்டிய அருண் விஜய்.. அதிகரிக்கும் மிஷன் படத்தின் வசூல்

படம் இந்த வருடம் கோடை விடுமுறை அல்லது அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளி வருகின்றன.

அஜித் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தீனா இந்த படத்தில் அஜித் அதிரடி ஆக்சன் காட்சிகளில் பின்னி பொடலெடுத்திருப்பார் மேலும் காதல் காட்சிகளும் அவ்வளவு அழகாக இருக்கும் இந்த படம் காலங்கள் கடந்த பிறகும் பேசப்படுகிறது.

நமச்சி செய்த சிறிய தவறு அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் தமிழ்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அர்ஜுன் குடும்பம்..!

இந்த நிலையில் தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதியை குறிப்பிடவில்லை. ஆனால் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.