தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு பயத்தை காட்டிய அருண் விஜய்.. அதிகரிக்கும் மிஷன் படத்தின் வசூல்

Mission: Chapter 1 : முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து  மோதுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின.

ஆரம்பத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்.. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது ஆனால் நாட்கள் போக போக சிவகார்த்திகேயன் படமும் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த பொங்கலுக்கு..

நமச்சி செய்த சிறிய தவறு அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் தமிழ்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அர்ஜுன் குடும்பம்..!

இந்த இரண்டு படங்கள் தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷின் திரைப்படம் 12 தேதி வெளியாகி உள்ளது. அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஞ்சயன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை எந்த இடத்திலயும் குறையே சொல்ல முடியாது.

அந்த அளவிற்கு விறுவிறுப்பாக சூப்பராக இருப்பதால்.. ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் சென்று அடைந்துள்ளது. தற்போது இந்த படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆனால் வசூல் சற்று குறைந்துள்ளது காரணம் இந்த படத்திற்கு பெரிய அளவு ஸ்கிரீன் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை..

ஸ்ருதி அம்மா முன்னாடி மீனாவின் அம்மாவை அசிங்கப்படுத்திய விஜயா.! மனோஜ் ரோகினிக்கு பதிலடி கொடுத்த முத்து..

தற்போது ரசிகர்களும் இந்த படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர் அது நடக்கும் பட்சத்தில் கேப்டன் மில்லர், அயலான் போன்ற படங்களின் வசூலுக்கு இணையாக மிஷன் படமும் இடம் பிடிக்கும் என பலரும் அடித்து கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..