நமச்சி செய்த சிறிய தவறு அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் தமிழ்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அர்ஜுன் குடும்பம்..!

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் திருமணம் ஆனவர் என்று தெரிந்து கொண்டு மேகனா தமிழ் இடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மேக்னா விளையாடதா தமிழ் நான் உண்மையாலும் உங்களை லவ் பண்ணுகிறேன் தேவையில்லாம விளையாடாதீங்க என கதறுகிறார் அப்பொழுது நான் எதுக்கு விளையாட போகிறேன் நிஜமாலும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தையே கூட பிறக்கப் போகிறது எனக் கூறுகிறார்.

தமிழ் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும்போது அவர் மேல கை வைக்கிற வேலை வைச்சுக்காதீங்க என சரஸ்வதி திட்டுகிறார் எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்களா என கதறுகிறார் அப்பொழுது நமச்சி நான்தான் திருமணம் ஆகவில்லை என கூறினேன் என கூறுகிறார் அப்பொழுது திருமணம் ஆகாதவர்களுக்கு தான் நீங்கள் உதவி செய்வீர்கள் என சில பேர் பேசிக் கொண்டார்கள் அதனால் தான் பொய் சொன்னேன் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் எல்லாத்தையும் விடுங்க என்ன மிட்நைட் அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றீங்களே உங்களுக்கு பிடித்த இடத்திற்கு அதுக்கு பெயர் காதல் இல்லையா என கேள்வி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் என்னை தேவதை தேவதை என்று சொன்னீர்களே அதற்குப் பெயர் காதல் இல்லையா தமிழ் என அழுது கொண்டே கேட்கிறார்.

நான் நீங்கள் செய்த உதவிக்கு தான் நன்றி கடனாக அப்படி சொன்னேன் என்பது போல் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ரவுடிகள் வெட்ட வந்த பொழுது நீங்கள் என்னை காப்பாற்றினீர்களே அதற்குப் பெயர் என்ன அது மட்டும் இல்லாமல் கத்தியால் என் கையில் வெட்டு வாங்கிக் கொண்டேனே உங்கள் மீது காதல் இருந்ததால் தான் அப்படி செய்தேன் என்பது போல் கூறுகிறார்.

ஆனால் இதை அனைத்தும் ஒரு நல்ல நட்புடன் தான் நான் செய்தேன் என தமிழ் கூற இன்னும் கோபப்படுகிறார் மேக்னா அதுமட்டுமில்லாமல் எல்லாத்தையும் என்கிட்ட இருந்து வாங்கி கிட்டீங்க உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டீங்க இப்ப எல்லாரும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா என்ன திட்டுகிறார், நான் லவ்வ சொன்னப்ப கூட நீங்க அக்சப்ட் பண்ணிட்டீங்களே அதுக்கு பேர் என்ன என்ன கேட்க அது நீங்க லவ் சொன்னப்ப நான் தான் இருந்தேன் என நமச்சி ஒப்புக்கொள்கிறார்.

உடனே நமச்சியை நடேசன் செவுளில் அலைகிறார் அடுத்த காட்சியில் சிறிது நேரத்தில் மேகனா மயங்கி விட ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள் அப்பொழுது மேகனாவின் மாமா மற்றும் அவரின் மகன் வருகிறார் இப்பொழுது நாம் நடிக்க வேண்டும் சோகமாய் இருப்பது போல் நடி எனக் கூறி தமிழ் மீது கோபப்படுகிறார்கள் சொத்துக்காக ஆசைப்பட்டு ஏமாற்றி விட்டீர்களே குடும்பத்தோடு சேர்ந்து என திட்டுகிறார் இங்கு எதுக்கு இன்னும் நினைக்கிறீங்க கெளம்ப வேண்டியதானே என திட்ட உடனே கிளம்புகிறார்கள்.

வீட்டிற்கு சென்ற தமிழ் குடும்பம் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது மற்றொரு பக்கத்தில் அர்ஜுன் தமிழ் இப்படி செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என அர்ஜுன் குடும்பம் தமிழை பற்றி தப்பு தப்பாக சொல்ல ராகினி அதனை ஏற்க மறுக்கிறார் நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது தமிழ் அப்படிப்பட்ட ஆள் கிடையாது எனக் கூறிவிடுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் குடும்பமே சோகத்தில் மிதக்கிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.