அஜித் BLACK MONEY வாங்க மாட்டாரு.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்.!

Ajith : தமிழ் சினிமாவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார் இவர் சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்தை எட்டி இருந்தாலும் ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மிக சாதாரணமாக பழகுகிறார் அதனாலேயே நடிகர், நடிகைகள் தொடங்கி ரசிகர்களுக்கும் பிடித்தவராக இருக்கிறார்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிநிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

டாப் ஹீரோனா சும்மாவா.. 2023 -ல் முதல் நாளில் அதிக கலெக்ஷன் செய்த 5 திரைப்படங்கள்.! ரஜினியை பின்னுக்கு தள்ளிய லியோ

விடாமுயற்சி அடுத்த வருடம் கோடை விடுமுறையை குறி வைத்து ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித் சினிமா ஆரம்பத்தில் பல பேருக்கு உதவி செய்திருக்கிறார் ஏன் நானே நேரில் பார்த்திருக்கிறேன் பலருக்கு உதவி செய்தவர்..

இப்படிப்பட்ட அஜித் சமீபகாலமாக உதவி செய்வதை கொஞ்சம் குறைத்து கொண்டார் என சொல்லபடுகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது அஜித் ஆரம்ப காலகட்டத்தில் பிளாக் மணி, ஒயிட் மணி என கலந்து வாங்கி வந்தார். அதனால் உதவி கேப்பவர்களுக்கு காசை வாரி வாரி கொடுத்தார்.

எனக்கு பிள்ளையா பொறந்துட்டு எனக்கே துரோகம் பண்ணிட்ட இல்ல.. கதிரை வீட்டை துரத்திய பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இந்த மாதிரியான நேரத்தில் அஜித் வீட்டில் ரெய்டு நடந்தது.  அதன் பிறகு சுதாகரித்துக் கொண்ட அஜித். படத்தில் கமிட் ஆனால்  பிளாக் மணி வாங்குவது கிடையாது அனைத்தையும் ஒயிட் மணியாக வாங்கி சரியாக வரிகட்டி வருகிறார்.  இப்பொழுதும் பலருக்கும் மறைமுகமாக அஜித் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார் என அந்தணன் பேசி உள்ளார்.