டாப் ஹீரோனா சும்மாவா.. 2023 -ல் முதல் நாளில் அதிக கலெக்ஷன் செய்த 5 திரைப்படங்கள்.! ரஜினியை பின்னுக்கு தள்ளிய லியோ

ஒரு வருடத்திற்கு 100 -க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் குறிப்பாக டாப் நடிகர்களின் படங்கள் வெளி வருகிறது என்றால் அதனை ரசிகர்கள் முதல் நாளே முதல் ஷோ திரையரங்கில் சென்று பார்த்து கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகின்றன அந்த வகையில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்..

1. லியோ : விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான் லியோ திரைப்படம். கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு முதல் நாளில் 148.50 கோடி வசூல் செய்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது..

எனக்கு பிள்ளையா பொறந்துட்டு எனக்கே துரோகம் பண்ணிட்ட இல்ல.. கதிரை வீட்டை துரத்திய பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

2. ஆதிபுருஷ் : ராமாயண கதைகளை வைத்து பிரபாஸ் நடித்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூலில் குறையில்லை 140 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது..

3. ஜவான் : பாலிவுட்டில் முதல் முறையாக கால் தடம் பதித்த இயக்குனர் அட்லீ. ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.. நயன்தாராவிற்கும் பாலிவுட்டில் இந்த படம் நல்ல வரவேற்பை கொடுத்தது இந்நிலையில் இந்த படம் முதல் நாள் வசூலில் 129.60 கோடி வசூல் செய்திருக்கிறது..

விஜயகாந்த் பெரிய பணக்காரன்.. சட்டை இல்லாமல் தரையில் எங்களுடன் தூங்குவான்.. சொல்லி கண்கலங்கிய சினிமா பிரபலம்

4. அனிமல் : ரன்வீர் கபூர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை கண்டிருந்தாலும் முதல் நாள் வசூலில் 116 கோடி வசூல் செய்திருக்கின்றன..

5. பதான் : ஷாருக்கான் தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த இந்த திரை படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை கண்டு அதிக நாட்கள ஓடியது. முதல் நாள் வசூலில் 106 கோடி செய்த கூறப்படுகிறது.