அஜித், சூர்யா, தனுஷுக்கு அடிச்சு தூக்கும் நம்பர்..! விஜய், ஜெயம் ரவி, விஷால், ஆர்யாவுக்கு ஏழரையாக அமைந்த நம்பர்.!

Ajith, suriya, dhanush 25 th movie : சினிமாவை பொறுத்தவரை டாப் நடிகர் என்றாலே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அதிலும் அஜித், விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதேபோல் முன்னணி நடிகர்களின் திரைப்படம்  திரையரங்கில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அதேபோல் ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் 25வது திரைப்படம் 50வது திரைப்படம் மிகவும் கோலகாலமாக கொண்டாடப்படும் அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் 25 வது திரைப்படம் 50-வது திரைப்படம் கண்டிப்பாக மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்து மொக்கை வாங்கிய முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை இங்கே காணலாம்.

பாண்டியனுக்கு தெரியாமல் நடு இரவில் கோமதிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

அப்படிதான் நடிகர் கார்த்திக்கு 25வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தீபாவளிக்கு கூட இந்த திரைப்படம் குறைந்த வசூலைத்தான் வசூல் செய்தது. அதேபோல் ஜெயம் ரவிக்கு 25வது திரைப்படமாக பூமி திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து பல்பு வாங்கியது.

அதுமட்டுமில்லாமல் ஆர்யாவுக்கு 25 ஆவது திரைப்படமாக வாசுவும் சரவணனும் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே தோல்வியை தழுவியது அதேபோல் விஷாலுக்கு 25 வது திரைப்படம் ஆக சண்டக்கோழி இரண்டாவது பாகம் வெளியாகி பல்ப் அடைந்தது.  அந்த வகையில் விஜய்யின் 25 வது திரைப்படம் கண்ணுக்குள் நிலவு இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தோல்வியை தழுவியது.

காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும் கிடைகாமலையா போகும்.. “ஜிகர்தண்டா 2” 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா .?

ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்களின் 25 ஆவது திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அந்த வகையில் அஜித்திற்கு 25வது திரைப்படமாக அமர்க்களம் திரைப்படமும் தனுஷிற்கு 25-வது திரைப்படமாக விஐபி திரைப்படம் சூர்யாவிற்கு 25வது திரைப்படமாக சிங்கம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

லியோ திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்தத் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கதையில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள்.