நீயா – நானா : 22 முறை போட்டி போட்ட அஜித், பிரசாந்த்.. வெற்றி யார் பக்கம் தெரியுமா.?

Ajith : சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் அஜித்தும், டாப் ஸ்டார் பிரசாந்தும் 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர் இதில் யாருக்கு வெற்றி அதிகம் என்று தற்பொழுது பார்ப்போம்..

1994 ஆம் ஆண்டு செந்தமிழ்ச்செல்வன் – அஜித்தின் பவித்ரா படம் மோதியது இதில் பிரசாந்தின் செந்தமிழ்ச்செல்வன் படம் வெற்றி பெற்றது. 1996 ல்  பிரசாந்தின் கல்லூரி வாசல் – அஜித்தின் வான்மதி படங்கள் ரிலீஸ் ஆனது இதில் வான்மதி ஹிட் அடித்தது.

மத்தவங்க இதை வச்சி பெரிய பிரச்சனையை உண்டாக்குவாங்க.. பிக்பாஸிடம் மாட்டிய விஷ்ணு – பிக்பாஸ் ப்ரோமோ

அதே ஆண்டில்  ஜூன் மாதத்தில் அஜித்தின் மைனர் மாப்பிள்ளை – பிரசாந்தின் கிருஷ்ணா படம் ரிலீஸ் ஆனது இதில் கிருஷ்ணா ஹிட் அடித்தது. 1997 ஆம் ஆண்டு அஜித்தின் நேசம் – பிரசாந்தின் மன்னவா ரிலீஸ் இதில் பிரசாந்த் வெற்றி பெற்றார்.

1998 ஏப்ரல் பிரசாந்தின் ஜீன்ஸ் – அஜித்தின் காதல் மன்னன், அவள் வருவாளா படம் ரிலீஸ் ஆனது இதில் அஜித் படங்கள் வெற்றி பெற்றது பிரசாந்துக்கு மெகா ஹிட் அடித்தது. அதே ஆண்டு ஆகஸ்டில் அஜித்தின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமும், பிரசாந்தின் கண்ணெதிரே தோன்றினாள் படமும் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெற்றது.

தளபதியை அடுத்து தனுசுக்கு குறி வைத்த வெங்கட் பிரபு.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

1998 ஏப்ரலில் அஜித்தின் வாலி – பிரசாந்தின் பூமகள் ஊர்வலம் படம் வெளியானது இதில் அஜித்தின் வாலி மெகா ஹிட் அடித்தது. 1998 அஜித்தின் தொடரும் – பிரசாந்தின் காதல் கவிதை படமும் வெளியானது இதில் பிரசாந்தின் படம் வெற்றி பெற்றது 1999 ஆம் ஆண்டு அஜித்திற்கு அமர்க்களம், நீ வருவாய் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது – பிரஷாந்தின் ஜோடி அடம் வெளியானது. இதில்  நீ வருவாய் படம் வெற்றி பெற்றது ஆனால் அஜித்தின் அமர்க்களம் படம் மெகா ஹிட் அடித்தது.

2000 – ம் ஆண்டு பிரசாந்தின் குட்லக் – அஜித்தின் முகவரி படம் வெளியானது இதில் இரண்டு படங்களுமே நன்றாக ஓடியது. 2000ம் – ஆண்டு மே மாதம் பிரசாந்தி அப்பு – அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படம் வெளியானது இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது.

2001 -ல் ஜனவரியில் அஜித்தின் தீனா  – பிரசாந்தின் பிரியாத வரம் வேண்டும் படம் வெளியானது இதில் அஜித்தின் தீனா மெகா ஹிட் அடித்தது. 2001 ஜூன் மாதத்தில் அஜித்தின் சிட்டிசன் – பிரசாந்தின் ஸ்டார் படம் வெளியானது இதில் அஜித்தின் சிட்டிசன் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

2001 ஆகஸ்ட் மாதத்தில் பூவெல்லாம் உன் வாசம்  – சாக்லேட் படம் மோதியது இதில் இரண்டு படங்களுமே ஹிட் அடித்தது. 2001 பிரசாந்துக்கு மஜ்னு – அஜித்துக்கு ரெட் படம் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது 2002 அஜித்தின் வில்லன் – பிரசாந்தின் விரும்புகிறேன் படம் ரிலீஸ் ஆனது.

இதில் அஜித்தின் வில்லன் மெகா ஹிட் அடித்தது 2003 பிரசாந்துக்கு பின்னர் அஜித்துக்கு ஆஞ்சநேயா – வின்னர் படம் ஹிட் அடித்தது 2005 -ல் பிரசாந்த்  லண்டன் – அஜித்தின் ஜி படம் வெளியானது இதில்  லண்டன் படம் வெற்றி பெற்றது 2006 இல் அஜித்தின் வரலாறு – பிரசாந்தின் ஜாம்பவான் படம் வெளியானது இதில் வரலாறு மெகா ஹிட் அடித்தது.

2006 டிசம்பரில் அஜித்தின் ஆழ்வார் – பிரசாந்தின் தகப்பன்சாமி அடைக்கலம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியது. அந்த மூன்று படங்களுமே சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. 2015 அஜித்தின் என்ன அறிந்தால்  – பிரசாந்தின் புலன்விசாரணை படங்கள் வெளியானது.  என்னை அறிந்தால் படம் ஹிட். 2018 டிசம்பரில் அஜித்தின் விசுவாசம் பிரசாந்தின் ஜானி.. அஜித்துக்கு மெகா ஹிட் அடித்தது.