தளபதியை அடுத்து தனுசுக்கு குறி வைத்த வெங்கட் பிரபு.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

dhanush : இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய்யை வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாக்கி வருகிறார் வெங்கட் பிரபு மேலும் இந்த திரைப்படத்தில் லைலா, சினேகா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, வி டிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க வெங்கட் பிரபு அவர்கள் புதிய திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்பொழுது தனுஷ் இந்த புதிய திரைப்படத்தில் இணைந்து  இருக்கிறார் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபுவின் நெருக்கமானவர் ஆனந்தன் இயக்கி வருகிறார்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு இந்த திரைப்படத்தில் லீலா குமாரவேல் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், கே பி ஒய் பாலா, ஆர் ஜே ஆனந்தி, ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் அதேபோல் வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை இயக்குனர் ஆனந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பதிவில் தங்களுடைய படத்திற்கு ஒரு பாடலை பாடி கொடுத்ததற்கு தனுஷ் அவர்களுக்கு நன்றி என நெகிழ்ச்சி உடன் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ்உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.