கிடைக்கிற கேப்பில் கோல் அடிக்கும் அஜித்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.!

Ajith : எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் உடம்பில் ஏகப்பட்ட ஆபரேஷன்கள் செய்யப்பட்டு நடக்கவே முடியாது என டாக்டர் கூறிய நிலையில் தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் வெற்றி கரமாக முடிந்ததைத் அடுத்து நடிகர்அஜித் சென்னை வந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

என்னால ஸ்ட்ரைக் கொடுக்க முடியும்.. நாலா நிக்சனுக்கு ரெட் கார்டே கொடுப்பேன்.! ரகசியங்களை போட்டு உடைக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள்

படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறதாம் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள் இந்த படத்திற்காக நடிகர் அஜித் குமார் 10 கிலோ உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் என்னதான் பிசியாக ஓடினாலும் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்திற்காக நேரங்களை செலவிட்டு வருகிறார். அஜித் மகன் ஆத்விக் ஃபுட்பால் பிளேயராக உருமாறி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் மகன் ஆகியவர்களுடன் இணைந்து ஃபுட்பால் கிரவுண்டில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம்..

அவங்கள ஹீரோயினா காண்பிக்க என்ன பகடைகாயா யூஸ் பண்றாங்க என்கிட்ட நடக்காது.. விஷ்ணுவை கடுப்பேத்தி பார்க்கும் அர்ச்சனா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் என்னதான் சினிமாவாக இருந்தாலும் குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவதில் அஜித்தை அடிச்சுக்க ஆளே இல்லை எனக் கூறி கமெண்டடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Ajith
Ajith