கிப்ட் கொடுக்கலாம் அஜித் சார் ஆனா யாருக்கு கொடுக்கணும்ன்னு தெரியாம போச்சே.! அமர்க்களம் படத்தில் நடந்த சுவாரசியமான தகவல்…

Actor Ajith Kumar: அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித் இயக்குனர் சரணுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து மகிழ் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் அமர்க்களம் படப்பிடிப்பின் பொழுது இயக்குனர் சரணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் அது குறித்து பார்க்கலாம். நடிகர் அஜித்தை ஆக்சன் ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் அமர்க்களம் தான். இப்படம் 1999ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றினை பெற்றது.

புது கார், சாக்கு மூட்டையில் பணம்.. பிரபல நடிகரை அசத்திய விஜயகாந்த்..! மறக்க முடியாத தருணம்..

இந்த படப்பிடிப்பின் போது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட பிறகு தங்களது பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலில் அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரண் எப்பொழுதும் இரு சக்கர வாகனத்தில் தான் வருவாராம் சென்னை சீனிவாசா தியேட்டரில் ஒருநாள் ஷூட்டிங் நடந்து முடிந்தவுடன் பேக்கப் சொல்லிவிட்டு ஸ்பாட்டில் இருந்து கிளம்புவதற்காக பைக்கை தேடி உள்ளார் சரண்.

ஆனால் அவர் நிறுத்திய இடத்தில் பைக் காணவில்லையாம் உடனே சரண் பதறிப் போக அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார் அதனை சிரித்தபடி அஜித் பார்த்துக் கொண்டிருக்க  சரண் கவனிக்க ஏன் சிரிக்கிறீங்க ஜி என்று கேட்டுள்ளார். அதற்கு ஏன் சார் நீங்க இந்த படத்தோட இயக்குனர் ஆனால் நீங்க பைக்ல வரீங்களே என கேட்டுவிட்டு மாருதி காரின் சாவியை சரணிடம் எடுத்துக் கொடுத்து இனி நீங்கள் காரில் வாங்க என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இதுதான் நடக்குது.. புதுசா ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல – வெளுத்து விட்ட நடிகை ராதிகா

இவ்வாறு திடீரென அஜீத் காரை பரிசாக அளித்ததால் சரண் நெகிழ்ந்து போனாலும் ஆனால் கார் ஓட்ட தெரியாது என்று ட்விஸ்ட் வைத்துள்ளார். பிறகு அந்த படத்தில் சரணிடம் இணை இயக்குனராக இருந்த ஹரி தான் சரணை அந்த காரில் அழைத்து சென்று தினமும் வீட்டிற்கும் ஷூட்டிங் நடக்கும் இடத்திலும் விடுவாராம்.