படிக்கிற வயதிலேயே கிரிக்கெட் வீரர் மீது ஆசைப்பட்ட பூங்குழலி.. பலருக்கும் தெரியாத தகவல்

Aishwarya Lekshmi’s Cricketer Crush: மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை பலரும் தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து 2021ல் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினார்.

சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? காதலன் சொன்னதால் நடிக்க மறுத்து பிறகு தலையில் அடித்துக் கொண்ட நடிகை..

மேலும் வரலாற்று காவியம் படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்து அனைவர் மனதிலும் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்தார். பூங்குழலி கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைய தனது சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து தமிழில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கை கல்லூரி காலத்தில் நேசித்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் படிக்கும் பொழுது பிரபல கிரிக்கெட் வீரருடன் நடந்த விஷயம் இதுதானா அந்த ரகசியங்களை தான் தற்பொழுது உடைத்திருக்கிறாரா என நக்கலாக கேட்டு வருகின்றனர்.

சீரியலில் சைடு கேரக்டரில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்.. பகிர் தகவலை கூறிய பாரதிகண்ணம்மா 2 நடிகை…

மேலும் யுவராஜ் சிங் விளையாடிய மேட்சிகளை அதிகமாக பார்த்து ரசித்ததாகவும் ஆனால் தற்பொழுது கிரிக்கெட் பார்க்கவே நேரமில்லை அந்த அளவிற்கு பிஸியாக மாறிவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் யுவராஜ் சிங் சிங்கிளாக இருந்தால் நாங்களே கல்யாணம் பண்ணி வைத்திருப்போம் தற்பொழுது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது சோ சேட் என பதிவு செய்து வருகின்றனர்.