மஹாவுக்காக சர்ப்ரைஸாக ரொமான்டிக் டின்னர் ஏற்பாடு செய்த சூர்யா! அதைக் கெடுக்க இப்படி ஒரு பிளான் போட்ட சித்ரா தேவி…

ஆஹா கல்யாணம் இந்த வார பிரமோவில்  சூர்யா மகாவுக்கு போன் பண்ணி  நைட் டின்னருக்கு வெளியே போகலாம் கிளம்பி இரு என சொல்கிறார். உடனே மகா சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். இதை பார்த்த  சித்ராதேவி  டின்னருக்கு வெளியே போகலாம்னு சந்தோஷத்தில் இருக்கியா இரு என்ன செய்றன்னு பாரு என மனசுக்குள்ளயே சொல்லிவிட்டு  வீட்டில் இருக்கும் அனைவரிடமும் போய் சூர்யா நம்பள இன்னைக்கு டின்னருக்கு வெளியே கூட்டிட்டு போறானான் எல்லாரையும் கிளம்ப சொல்லி இருக்கான் கிளம்புங்க என மகாவின் டின்னரை கெடுப்பதற்காகவே அனைவரிடமும் சொல்லிவிடுகிறார்.

அனைவரும் கிளம்பி ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது மகா மாடியில் இருந்து கிளம்பி வருகிறார். ஆமா நீங்க எல்லாம் எங்க போறீங்க என்ன கிளம்பி இருக்கீங்க எனகேட்கிறார். அதற்கு சூர்யா எங்களை வெளியே டின்னருக்கு கூட்டிட்டு போறான், கிளம்பி இருக்க சொன்னான் அதான் கிளம்பி இருக்கோம் என சொல்கின்றனர்.

மாமான்னு கூப்பிடும் தங்கமயில்!! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர் இன்றைய ப்ரோமோ.

சூர்யா வந்து மகாவை காரில் அழைத்துக் கொண்டு அனைவரும் டின்னருக்கு வருவதை பார்த்து தலையில் அடித்துக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து  ஹோட்டலுக்கு போகின்றனர். அங்கு மஹாவுக்காக தனியாக ரொமான்டிக்காக டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கிறார். அங்கு பாட்டு டான்ஸ் என அனைத்தும் நடக்கிறது சூர்யா மகாவுக்கு பூங்கொத்து கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார்.

சூர்யாவின் கோர்ட்டில் மகா  லிப்ஸ்டிக் ஒட்டிக் கொள்கிறது. அதைப் பார்த்த தாத்தாவும் பாட்டியும் சந்தோஷப்பட்டு சின்ன மருமகளிடம் சூர்யா கோர்ட்டை பாரு என சொல்லி சந்தோஷப்படுகின்றனர். சூர்யா ரொமான்டிக்காக மகாவுக்கு செய்யும் அனைத்தையும் பார்த்து தாத்தா, பாட்டி, கோடீஸ்வரி என அனைவரும் திக்கு முக்காடி சந்தோஷத்தில் நிற்கின்றனர்.

பாக்கியாவிடம் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி!! சும்மா கெத்தாக வந்த பாக்யா..

ஆனால் ஐஸ்வர்யாவோ கடுப்பாகி கௌதம் பண்ணவில்லை என கௌதமை பார்த்து முறைக்கிறார். அது மட்டுமல்லாமல் சூர்யா இப்படி பண்றானே என நினைத்து  ராஜலட்சுமி கோபமாக சூர்யாவை முரைத்தபடி பார்த்துக் கொண்டே இருக்கிறார்.சித்ரா தேவியோ வயித்தெரிச்சல்  தாங்க முடியாமல்  நிற்கிறார்.அத்துடன் இந்த ப்ரோமோ  முடிவடைகிறது.