சந்தோஷத்தில் மகாவை தூக்கி சுத்தும் சூர்யா.! பார்த்து வயித்தெரிச்சல் படும் ஐஸ்வர்யா!!! ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்.

aaha kalyanam : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்கின்றனர் அப்போது சித்ரா இன்னும் என்ன ராஜலட்சுமி காணும் வந்தா ஏதாவது பெரிய பிரச்சனை நடக்கும் சந்தோஷப்படலாம் என நினைத்து உட்கார்ந்து இருக்கிறாள் உடனே ராஜலட்சுமி வருகிறாள்.

ஆனால் ராஜலட்சுமி வந்தவுடன் மகா என்ன இன்னும் யாருக்கும் காபி குடுக்கலையா என அதட்டி  கேட்கிறாள். உடனே ராஜலட்சுமியின் கணவர் மகா எல்லாத்துக்கும் காபி கொடுத்துட்டா உனக்கும் காபி எடுத்துட்டு வந்தா ஆனா காபி ஆறிடுச்சு என சொல்கிறார்.

மீனாவை பழிவாங்கும் விஜயா.! முத்துவை வீட்டை விட்டு துரத்த பெத்த அம்மா செய்ற வேலைய இது.!

காபி ஆர்னா பரவால்ல அத்தை  நான் உங்களுக்காக காபி போட்டுட்டு இருக்கேன் என மகா சொல்கிறாள். காபி கொடுத்ததும் வாங்கி குடித்துவிட்டு இன்னைக்கு என்ன டிபன் என கேட்கிறாள். அதற்கு மகா இட்லி, சாம்பார் என சொல்கிறாள். இனி என்ன சமைக்கனும்னு என்ன கேட்டுட்டு தான் சமைக்கணும் என ராஜலட்சுமி மஹாவுக்கு ஆர்டர் போடுகிறாள்.

உடனே சித்ரா வந்து, என்ன அக்கா மகா உங்கள எவ்வளவு அசிங்கப்படுத்துன ஆனா நீங்க எதுவும் நடக்காத மாதிரி அவகிட்ட பேசுறீங்க என கேட்கிறாள். உடனே அதைப் பார்த்த பாட்டி  சித்ராவை திட்டுகிறாள். உனக்கு யாரும் சந்தோஷமா இருந்தா புடிக்காதே, உடனே காயத்ரியும் இவளுக்கு வேற வேலையே இல்ல எப்ப யாரு சண்டை போடுவாங்க ஏத்தி விடலாம்னு இருப்பா என சொல்கிறாள்.

அடுத்த சீனில் ராஜலட்சுமி தானாகவே சூர்யாவை கூப்பிட்டு பேசுகிறாள். உடனே சூர்யா அதை தாத்தா, பாட்டி, காயத்ரியிடமும் சொல்லி என்கிட்ட அம்மா தானாவே பேசிட்டாங்க என்ன சந்தோஷப்படுகிறார். அதற்கு காயத்ரியோ உங்க அம்மா ஒன்னும் அவ்வளவு சீக்கிரமாக எதையும் மறக்க மாட்டாங்க அவங்க உன்கிட்ட பேசுறதுக்கு காரணம் மகா தான் என சொல்லுகிறாள்.

யாரடா பின்னுக்கு தள்ளுறீங்க முந்தி கொண்டு முன்னுக்கு வரும் சீரியல்.! டாப் 10 சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் இதோ..

உடனே சூர்யா ரூமுக்கு போய் சந்தோஷமாக மஹாவை தூக்கி சுத்துகிறார். ஆனால் மகா உங்க கிட்ட பேசினது ஓகே ஆனா என்கிட்டயும் பேசினாங்களே அப்ப என்னமோ இருக்கு உங்க அம்மா ஏதோ பிளான் வச்சிருக்காங்க என சொல்கிறாள். சூர்யா எங்க அம்மா பத்தி எதுவும் பேசாத என சொல்கிறார்.

இதற்கிடையில் சித்ராவும் ராஜலட்சுமியும் மகாவை எப்படி பழி வாங்குவது என பேசிக்கொள்கின்றனர். ராஜலட்சுமி சித்ராவிடம் வேலைக்காரியை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு மகாவை எல்லா வேலையும் செய்ய வைத்து கஷ்டப்படுத்தினால்  மகா தானாகவே ஓடிப் போயிடுவா என சொல்கிறாள்.

அடுத்த சீனில் பாட்டி ரொம்ப சோகமா இருக்காங்க. உடனே சூர்யா பாட்டி ஏன் சோகமா இருக்கீங்க என கேட்க, அதற்கு பாட்டி, தாத்தா இன்னைக்கு ஃபுல்லா ரூம்ல தான் இருக்காரு உடம்பு சரி இல்லன்னு வெளியவே வரல அது மட்டும் இல்லாம சரியா சாப்பிடல  எனக்கு ரொம்ப பயமா இருக்கு என சொல்கிறாள். உடனே சூர்யா தாத்தாவை பார்ப்பதற்கு ரூமுக்கு செல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்