மீனாவை பழிவாங்கும் விஜயா.! முத்துவை வீட்டை விட்டு துரத்த பெத்த அம்மா செய்ற வேலைய இது.!

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய சுய ரூபத்தை காட்ட ஆரம்பிக்கிறார் அது மட்டும் இல்லாமல் ரோகினியின் மலேசியா மாமா வந்ததும் அவருக்கு சந்தோஷமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் சில பேர் நாக்கு மேல பள்ளு படுற மாதிரி பேசினாங்க அவங்களுக்கெல்லாம் ரோகினி மாமா சரியான பதிலடி கொடுத்திருக்காங்க என விஜய பேசுகிறார்.

அடுத்த காட்சியில் ஸ்ருதி ரூமுக்கு போகிறார் அதே போல் ரோகிணியும் ரூமுக்கு போகிறார் மீனா ரூமுக்கு போகும்போது எங்க போற என கேட்கிறார் நான் கடையை திறக்க போகணும் என கூற கடையெல்லாம் அப்புறம் திறக்கலாம் பர்ஸ்ட் எல்லாருக்கும் டீ போடு என தெனாவட்டாக பேசுகிறார்.

வேறு வழியில்லாமல் மீனா டீ போடுகிறார் உடனே விஜயா அண்ணாமலை இடம் எல்லாத்துக்கும் ரூம் இருக்கு நம்ம மட்டும்தான் இப்ப ஹால்ல படுத்து கிடக்கிறோம் என பேசுகிறார்கள் உடனே அண்ணாமலை அதுக்கு ஒரு பிளான் இருக்கு மேல ஒரு ரூம் கட்டப் போறோம் என பேசுகிறார். உடனே விஜயா மேல ரூம் கட்டிட்டா இந்த முத்து மீனாவும் இங்கேயே நிரந்தரமா தகிடுவாங்க எப்படி இவுங்களை  தொரத்த முடியும் என மனசுக்குள் நினைத்துக் கொள்கிறார்.

மீனா காபி எடுத்துக் கொண்டு கொடுக்கிறார் அப்பொழுது அண்ணாமலைக்கு சுகர் கம்மியாக இருக்கும் காபியை கொடுக்கிறார். விஜயாவிடம் காபியை கொடுக்கும்பொழுது என்ன இவ்வளவு சக்கரை போட்டு இருக்க என பேசுகிறார் உடனே முத்து அப்போ அம்மாவுக்கு சுகர் வந்திருக்கும் வாங்க டாக்டர் கிட்ட செக் பண்ணலாம் என பேச விஜயா பதறி அடித்து போய் அதெல்லாம் ஒன்னும் இல்ல கரெக்டா தான் இருக்கு சர்க்கரை என பல்டி அடிக்கிறார்.

அடுத்த காட்சியில் விஜயாவின் தோழி வருகிறார் அவரிடம் பேச வேண்டும் என சுருதி ரூமுக்கு முன்பே போகிறார் உடனே கதவை சாத்துகிறார் அதேபோல் அடுத்ததாக ரோகிணி ரூமுக்கு போக போகிறார் அங்கு மனோஜிடம் ரோகிணி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார் அடுத்ததாக முத்து ரூமுக்கு போகிறார் தனியாக பேச வேண்டும் என கூறுகிறார் விஜயா, ஹாஸ்பிடல் தான் போகணும் என நக்கலாக பேசுகிறார்.

இவன் கடக்கிறான் என கூறிவிட்டு நம்ம வா மாடிக்கு போகும் எனக் கூறுகிறார் அங்கு இந்த மீனா முத்து ரெண்டு பேரும் இங்கேயே இருந்துருவாங்க அதுக்கு சீக்கிரம் முடிவு கட்டணும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது மாடிக்கு வருகிறார் மீனா உடனே நீ என்ன ஓட்டு கேக்குறியோ என விஜயா மீனா விடம் கேட்க அந்த புத்தி எனக்கு கிடையாது நீங்கதானே காபி கேட்டீங்க என காபியை கொடுத்துவிட்டு கீழே செல்கிறார்.

அடுத்த காட்சியில் ரோகினி பார்லரை வாங்கிய ஒருவர் அங்கு கார் ரிப்பேர் ஆகி நினைக்கிறார் அப்பொழுது முத்து அவரை பிக்கப் செய்து கொண்டு பார்லருக்கு கொண்டு விடுகிறார் அப்பொழுது காசு கொடுக்காமல் அந்தப் பார்லர் உரிமையாளர் சென்று விடுகிறார் உடனே காசு வாங்க முத்து போகிறார் ஆனால் அந்த பார்லரில் தான் ரோகிணி வேலை செய்கிறார் அதனால் முத்துவிடம் சிக்குவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.