யாரடா பின்னுக்கு தள்ளுறீங்க முந்தி கொண்டு முன்னுக்கு வரும் சீரியல்.! டாப் 10 சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் இதோ..

Tamil Serials TRP list: தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி இந்த வருடத்தின் 4வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்து இருக்கும் சீரியல் விவரங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வாரம் தோறும் எந்த தொலைக்காட்சியின் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது என்பது குறித்த டிஆர்பி லிஸ்ட் வெளியாகுவது வழக்கமாக உள்ளது.

அப்படி முக்கியமாக சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 5 இடங்கள் பிடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது. விஜய் டிவியின் சில சீரியல்கள் மட்டுமே இடம்பெற்று வருகிறது. அப்படி இந்த வாரம் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் தான் சன் டிவியின் சிங்க பெண்ணே.

அட விஜய்க்கு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறக்க முடியாத காதலுக்கு மரியாதை..

சமீபத்தில் அறிமுகமான இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் 11.01 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் சன் டிவியின் கயல் சீரியல் 10.34 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது.

சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் 9.98 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தையும் சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் 9.79 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தையும் சுந்தரி சீரியல் 8.56 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.55 புள்ளிகள் உடன் 6வது இடத்தையும் மீண்டும் சன் டிவியின் இனியா சீரியல் 7.67 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. விஜய் டிவியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 6.68 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது.

குறைவான பட்ஜெட்டில் உருவாகி கோடியில் லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் ஐந்து திரைப்படங்கள்.!

இதனை அடுத்து விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் 6.34 புள்ளிகள் உடன் 9வது இடத்திலும் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் 6.05 புள்ளிகள் உடன் 10வது இடத்திலும் இருக்கிறது.