போலீஸிடமிருந்து தப்பித்த மகா, சூர்யா!! மகா கஷ்டப்படுவதை பார்த்து கோவப்படும் கோடீஸ்வரி. சித்ரா தேவியை பழி வாங்குவாரா..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பீடா கடையில் இருக்கும்  சூர்யா மற்றும் மகாவிடம் போலீஸ் என்கொயரி பண்ணுகிறது. அப்போது சூர்யா நாங்க திருடங்க இல்ல பாருங்க கல்லாப்பெட்டியில் நூறு ரூபா போட்டு இருக்கோம் அது மட்டுமில்லாம அதிலிருந்து நாங்க ஒரு காசு கூட எடுத்து இருக்க மாட்டோம் செக் பண்ணி பாருங்க என சொல்கிறார். உடனே கடைகாரர் செக் பண்ணுகிறார் காசு எல்லாம் கரெக்டா இருக்கு நூறு ரூபாய் எக்ஸ்ட்ராவே இருக்கு என சொல்கிறார்.

மேலும் போலீஸ்காரர் அப்புறம் ஏன் நீங்க ரெண்டு பேரும் கடையை சாத்திக்கிட்டு உள்ள என்ன பண்றீங்க என கேட்கிறார். அதற்கு சூர்யா நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி இவ பீடா வேணும்னு கேட்டா அதான் இங்க வந்தோம் என்ன சொல்கிறார். உடனே போலீஸ் உங்க வீட்டுக்கு போன் பண்ணுங்க நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தான என நாங்க தெரிஞ்சுக்கணும் என கேட்கிறார்.

நடப்பது தெரியாமல் பாக்கியாவை திட்டி தீர்க்கும் ஈஸ்வரி, கோபி!! ஜெனிக்கு அட்வைஸ் பண்ணும் மரியம்.! செழியனிடம் சண்டை போடும் ஜோசப்.

அதற்கு மகா போன வீட்டிலேயே வச்சுட்டு வந்துட்டோம் என சொல்கிறார். நீங்க வேணும்னா நாங்க நம்பர் தரோம் அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசுங்க என போலீஸிடம் மகா சொல்கிறார். அதோடு மகா சூர்யாவிடம் நான் சொன்னேன்ல போன் எடுத்துட்டு போலாம்னு சொன்னேன்ல இப்ப பாருங்க பிரச்சினை ஆயிடுச்சு என ரெண்டு பேரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். சண்டையைப் பார்த்த போலீஸ் நிறுத்துங்க நாங்க நம்புறோம் நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தான்னு என சொல்கிறார். நீங்க சண்டை  போட்டுக்கறதில்லையே தெரியுது நீங்க புருஷன் பொண்டாட்டி தான்னு என சொல்லிவிட்டு சூர்யாவுக்கு கை கொடுக்கிறார்.

பரவால்ல இந்த நேரத்துல பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு அழைச்சிட்டு வந்து பீடா வாங்கி கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு அவார்ட் கொடுக்கணும், அப்படி இல்லன்னா எக்சிபிஷன்ல தான் நிக்க வைக்கணும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

சூர்யா வீட்டிலோ அனைவரும் மகாவிற்காக வெயிட் பண்ணுகின்றனர்.அப்போது சித்ராதேவி இன்னும் இழுத்து போட்டு தூங்கிட்டு இருக்கா போல என மஹாவை திட்டுகிறார். உடனே பவித்ரா ஏன் டெய்லி அவதான காபி போட்டு கொடுக்கிற இன்னைக்கு ஒரு நாள் அவ இல்லனா என்ன என சொல்லிவிட்டு மகாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். மகா போன் எடுக்கவில்லை என சொல்ல  அப்போது மஹாவும் சூர்யாவும் வீட்டிற்குள் நுழைகின்றனர் உடனே அதை பார்த்த சித்ராதேவி  எங்கேயோ போயிட்டு லவ்வர்ஸ்  ரெண்டு பேரும் இப்பதான் வீட்டுக்கு வராங்க என சொல்கிறார்.

அர்ஜுன் பேசிய வீடியோவை ராகினியிடம் காட்டிய தமிழ்.. அர்ஜுன் சட்டையை பிடித்து கேள்வி கேட்ட ராகினி.. அணுகுண்டு புஸ்வானமாகிய கதைதான்..

இவர்களைப் பார்த்ததும் தாத்தாவும் பாட்டியும் சந்தோஷப்படுகின்றனர். உடனே மகா அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் போய் பிரஷ் ஆயிட்டு வந்து காபி போட்டு தரேன் என சொல்லிவிட்டு குளிச்சிட்டு புடவை கட்டிட்டு வந்து காபி போட்டு கொடுக்கிறார்.

காபி கொடுத்துவிட்டு சமையல் வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார். அப்போது அங்கு வந்த கோடீஸ்வரி  மகா மட்டும் தனியாக சமையல் வேலையை பார்ப்பதை பார்த்து உதவி செய்யப்போகிறார். அதற்கு சித்ராதேவி ராஜலட்சுமியிடம் சின்ன கோழி வேலை செய்யறது பார்த்து கஷ்டம் தாங்காம தாய் கோழி போய் வேலை செய்து என சொல்கிறார்.

உடனே ராஜலட்சுமி கோடீஸ்வரியை வேலை செய்யக்கூடாது என சொல்கிறார். இன்னைக்கு நீங்க வேலை செஞ்சிடுவீங்க அப்புறம் நாளைக்கு யாரு செய்றது அவளே தனியா செஞ்சி எல்லாத்தையும் கத்துக்கட்டும் அப்பதான் எல்லா நாளும் அவளால தனியா செய்ய முடியும் என சொல்ல கோடீஸ்வரிக்கு கஷ்டம் ஆகிறது. சூர்யா, தாத்தா மற்றும் பாட்டி மகா மட்டும் தனியா வேலை செய்றாளே என அவளையே பார்க்கின்றனர். கோடீஸ்வரிக்கு மகா கஷ்டப்படுவதை பார்த்து  பயங்கரமாக கோபம் வருகிறது.அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.