மகாவை விட்டுக் கொடுக்காமல் சித்ராதேவியையும் ஐஸ்வர்யாவையும் அசிங்கப்படுத்திய ராஜலட்சுமி!! தெரு தெருவாக மகாவை தேடி அலையும் குடும்பம். ஆஹா கல்யாணம்..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மகா காணாமல் போனது தெரிய வர அனைவரும் ஹாலுக்கு வருகின்றனர். அப்போது ராஜலட்சுமி சூர்யாவிடம் மகா எங்க போனா உனக்கு அவளுக்கும் ஏதாவது பிரச்சனையா எதா இருந்தாலும் மறைக்காம என்கிட்ட சொல்லு என கேட்கிறார். அதற்கு சூர்யா அதெல்லாம் எதுவும் இல்லம்மா நல்லா தான் இருந்தா எப்படி என்ன ஆச்சுன்னு தெரியல சொல்லாம எங்கேயோ போய்ட்டா என கூறுகிறார்.

அந்த சமயத்தில் இதான் நேரம்ன்னு சித்ராதேவி  இவங்க குடும்பத்துக்கு வேற வேலையே இல்ல முதல்ல இவளை காணும் இப்ப இவ தங்கச்சியைக் காணும் இவங்களை தேடுறது தான் நமக்கு வேலை என திட்டுகிறார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா எல்லாத்தோட அட்டென்ஷனும் அவ பக்கம் இருக்கணுங்குறதுக்காக அவ வேணும்னே எங்கேயாவது போயிருப்பா என சொல்கிறாள்.

பிறந்தநாள் கூட பார்க்காம சரவணனுக்கு அறைவிட்ட பாண்டியன்! குமரவேலுக்கு அறைவிட்ட மாரி.. பாண்டியன் ஸ்டோர்..

உடனே சூர்யா, நீ எல்லாம் அவ கூட தான் பொறந்தியா, நீ காணாம போனப்ப அவ எவ்வளவு துடிச்சு போன, ஆனா நீ இவ்ளோ கேவலமா பேசுற என திட்டுகிறார். அதே நேரத்தில் ராஜலட்சுமி இவளுக்கும் இவ அத்தைக்கும் வேற வேலையே இல்ல என குடும்பத்துல நடக்குற பிரச்சனையில குளிர் காயறதுதான் வேலையை என சித்ராதேவியையும் ஐஸ்வர்யாவையும் திட்டுகிறார்.

உடனே சூர்யாவின் அப்பா நானும் ரகுவரனும் ஒரு பக்கம் தேடி போறோம், விஜய் நீ ஒரு பக்கம் தேடி போ, கௌதம் நீ ஒரு பக்கம் போய் தேடு என அனைவரும் தேட கிளம்புகின்றனர். அப்படி அனைவரும் சின்சியராக தேடுகின்றனர். ஆனால் கௌதம் மட்டும் கூல் ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு தேடாமல் ஒரே இடத்தில் இருக்கிறார்.

மகா இரவு நேரத்தில் ரோட்டில் நடந்தபடியே நடந்ததை நினைத்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஒரு கோவில் திறந்து இருக்கிறது. உடனே மகா கோவிலுக்கு சென்று உட்கார்ந்து கொள்கிறார். சூர்யாவோ தேடிவிட்டு சரி அவங்க வீட்டுக்காவது போயிருப்பாலோ என்னமோ என கோடீஸ்வரிக்கு போன் பண்ணி மகா அங்க வந்தாளா எனக் கேட்கிறார்.

தமிழிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.. வேலில போற ஓணானை தூக்கி வேட்டியில் விட்டுக் கொண்ட பரமு… நீ விரிச்ச வலையில நீனே சிக்கி கிட்டியே மாப்பிள்ளை .

உடனே கோடீஸ்வரி பயந்து என்ன பிரச்சனை என்ன ஆச்சு? யார்கிட்டயும் சொல்லாம அவ அப்படி போக மாட்டாளே என கேட்க அதற்கு சூர்யா பிரச்சனை எல்லாம் எதுவும் இல்ல ஆனா ஏன் போனான்னு தெரியல என சொல்கிறாள்.

சூர்யா தேடி அலைந்ததில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடுகிறது உடனே மகா ஒரு நாள் அவருக்காக இன்ஹேலரை கார், பேக் என அனைத்திலும் ஒன்னு ஒன்னு வைத்திருப்பார். அதை யோசித்துப் பார்த்து எடுத்து சுவாசிக்கிறார். இப்படி அனைவரும் தேடி அலைகின்றனர். வீட்டில் அனைவரும் தூங்காமல் உட்கார்ந்து இருக்கின்றனர். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் சோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த விஜயின் அம்மா கடுப்பாகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.