போதையில் மகாவால் திருடி போலீசில் சிக்கிய சூர்யா!! ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் சித்ராதேவி கோடீஸ்வரியை வீட்டை விட்டு துரத்த வேண்டும் அதிலும் குறிப்பாக அவளுடைய ரூமை விட்டு துரத்த வேண்டும் என்பதற்காக ஏசியை ஃபுல்லா வைக்கிறார். குளிர் தாங்க முடியாமல் கோடீஸ்வரி  சித்ராதேவி போத்தி இருக்கும் போர்வையை பிடித்து இழுக்கிறார். ஆனால் அவருக்கு தராமல் தள்ளி விடுகிறார். உடனே கோடீஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து நடந்து கொண்டிருக்கிறார். அப்போது கபோடில் இருக்கும் சித்ரா தேவியின் புடவைகளை எடுத்துக்கொண்டு ஆபத்துக்கு பாவம் இல்லை என போர்த்திக் கொள்கிறார்.

அது தெரியாமல் சித்ராதேவி கோடீஸ்வரி குளிர் தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்துட்டா போல காலைல எழுந்திருச்சு பார்த்தா கண்டிப்பா ஜன்னி வந்து கடப்பா என நினைத்துக் கொண்டே தூங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து  மகா சூர்யாவிடம்  எனக்கு பீடா வேணும் எனக் கேட்கிறார். உடனே சூர்யா ஆன்லைனில் ஆர்டர் பண்ணலாம் என பார்க்கிறார். ஆனால் முடியவில்லை அதனால் சூர்யா நாளைக்கு வாங்கிட்டு வரேன் என கூறுகிறார். உடனே மகா நான் என்ன  அந்த நிலா வேணும் சூரியன் வேணும்னா கேட்டேன் ஒரு பீடா தானே அது கூட உங்களால வாங்கி தர முடியலையா அப்போ உங்களுக்கு என் மேல பாசமே இல்லையா என ஒப்பாரி வைத்து அழுகிறார்.

பட்டு வேட்டி சட்டையில் பக்காவாக சுயம்வரத்திற்கு கிளம்பிய சரவணன்!! மயிலு சிக்குமா..பாண்டியன் ஸ்டோர்.

சரி வா நம்ம வெளியில போய் சாப்பிட்டு வரலாம் என சொல்கிறார். பைக் சாவி எங்க இருக்குன்னு சொல்லு யாருக்கும் தெரியாம நம்ம போய் சாப்பிட்டு வந்துரலாம் என  சொல்ல மகா சாவியை கொடுத்துவிட்டு சுடிதார் போட்டு கொண்டு போகிறார்.

மகாவை பார்த்த சூர்யா என்ன சுடிதார் எல்லாம் போட்டு இருக்க எனக் கேட்கிறார். அதற்கு மகா  பைக்ல போறதுக்கு சுடிதார் தான் கம்ஃபர்டபுளா இருக்கும். அதான் என சொல்கிறார். உடனே இருவரும் பைக்கில்  ஏறுகின்றனர்.

மகா பின்னாடி உட்கார்ந்து கட்டி பிடிக்கிறார். சூர்யா இப்படி புடிச்சா எப்படி பைக் ஓட்றது என கேட்கிறார். மேலும் இவர்கள் கடை கடையாக பார்க்கின்றனர் எல்லா கடையும் மூடி இருக்கிறது.

ஜெனி காலில் விழுந்து கதறிய செழியன்!! இறங்கி வருவாரா.. கண்ணீரில் மிதக்கும் பாக்யா மரியம்..

ஆனா ஒரு கடை மட்டும் பாதி மூடியபடி இருக்கிறது. அந்த கடைக்காரருக்கு  பாத்ரூம் வந்ததால் பாதி மூடி வைத்துவிட்டு சென்று விடுகிறார். ஆனால் திரும்ப வந்து பார்க்கும்போது  கடைக்குள் மகாவும் சூர்யாவும் கடையை மூடிக்கொண்டு பீடா சாப்பிட்டுக் கொண்டு பாட்டு போட்டு டான்ஸ் ஆடுகிறாரகள். உடனே கடைக்காரர் கடைக்குள் திருடன் திருடி  இருவரும் வந்துவிட்டனர் என போலீசுக்கு போன் பண்ணி சொல்லுகிறார். உடனே போலீசும் அங்கு வந்து விடுகிறது. மகா சூர்யாவுக்கு பீடாவில் போதை வருவது போன்று ஏதோ உன்னை வைத்து விடுகிறார். அதனால் சூர்யா போதையில் இருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.