கோடீஸ்வரி புடவையை கிழித்து பழி வாங்கிய சித்ராதேவி!! சும்மா ஓட ஓட விரட்டிய கோட்டி!! பயந்து சரண்டரான சித்ரா.

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் மகா ரூமுக்கு வந்து இடுப்பு வலி தாங்க முடியாமல் மருந்து தடவ கஷ்டப்படுகிறார். அப்போது சூர்யா மகா ஒத்தாலா எல்லா வேலையும் செய்றதை நினைத்துப் பார்க்கிறார்.அதனை தொடர்ந்து மகா இடுப்பு வலி தாங்க முடியாமல் மருந்து தடவ முடியாமல் தவிக்கிறேன் நீங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க வந்து உதவி செய்யலாம்ல என சூர்யாவை கூப்பிடுகிறார்.

உடனே சூர்யா பார்க்க கஷ்டமா தான் இருக்கு ஆனா உனக்கு வலி இருக்கிற இடம் பார்த்தா டேஞ்சரசால இருக்கு என சொல்கிறார். உடனே கண்ணை மூடிக்கொண்டு மகாவின் இடுப்புக்கு மருந்து தடவ போகிறார். அப்போது இடுப்பில் கையை வைத்துக்கொண்டு ஒரு மாதிரியாக ரொமான்டிக்காக பார்ப்பது போல் இருக்கிறார். உடனே சூர்யா மகாவிடம் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன் அதுக்கு பதில் சொல்றியா எனக் கேட்க, உடனே மகா ஏதோ ரொமான்டிக்கா கேக்க போறாரு என மனசுல நினைச்சுகிட்டு கேளுங்க என சொல்கிறார். சிவராத்திரி அன்னைக்கு வேண்டுதலுக்காக கோவிலுக்கு போனியா இல்ல வேற எதுக்காவது போனியா என கேட்கிறார்.

ராகினி நீ அர்ஜுனை விட ரொம்ப மோசமானவ… தமிழ் மற்றும் கோதையை அசிங்கப்படுத்தி அனுப்பிய ராகினி.. வளையகாப்பில் அர்ஜுன் போடும் சதித்திட்டம்…

உடனே கோபமான மகா எனக்கு மருந்தும் தடவ வேண்டாம் ஒன்னும் தடவ வேண்டாம் இங்க இருந்து நீங்க போங்க என சொல்லிவிட்டு படுத்து விடுகிறார்கள். அதை தொடர்ந்து கோடீஸ்வரி ரூமுக்கு போகிறார்.  அங்கு சித்ராதேவி கோடீஸ்வரி புடவையை கத்தரிக் கோல் வைத்து நறுக்கி விடுகிறார். அதை கண்டுபிடித்த கோடீஸ்வரி எலியை விரட்டுவது போல சித்ரா தேவியை பயங்கரமாக வைத்து செய்கிறார். சித்ராதேவி தாங்க முடியாமல் கதறுகிறார்.

மேலும் அடுத்த சீனில் கோடீஸ்வரி ஐஸ்வர்யாவை வெளியே கூட்டிட்டு வந்து தண்ணி குடத்தை தூக்க சொல்கிறார். அதற்கு முடியாது என ஐஸ்வர்யா சொல்ல இல்லனா உனக்கு சிசேரியன் ஆயிடும், அப்ப ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால நீ இந்த வேலை எல்லாம் செஞ்சு தான் ஆகணும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு என மிரட்டி அவளை தண்ணி குடம் தூக்க வைத்து கூட்ட வைக்கிறார்.

அண்ணாமலை கூப்பிட்டும் வீட்டுக்கு வர மறுத்த ரவி.. சோறு கிடைச்ச இடம் சொர்க்கமோ… முத்து உன் வயித்துல பிறந்தவன் தானே விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா…

ஐஸ்வர்யா கஷ்டப்படுவதைப் பார்த்து கௌதமும் சித்ரா தேவியும் சந்தோஷப்படுகின்றனர். மேலும் ஐஸ்வர்யாவை வீடு துடைக்க சொல்கிறார் கோடீஸ்வரி. இதை பார்த்து சித்ராதேவி கௌதமிடம் என்னதான் கோடீஸ்வரி எனக்கு தொந்தரவா இருந்தாலும்  ஐஸ்வர்யாவை படுத்துற பாட பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்படியாவது இந்த ஐஸ்வர்யாவ சீக்கிரமா இங்கே இருந்து துரத்தனும் என சொல்கிறார்.

ஐஸ்வர்யா வீடு துடைப்பதை  பார்த்த மகா அக்கா நீ ஏன் இந்த வேலை எல்லாம் பண்ற நான் பாத்துக்க மாட்டேன்னா என சொல்ல அதற்கு கோடிஸ்வரி நீதான் இவ்வள அங்கேயும் வேலை செய்ய விட மாட்டான்ன இங்கேயும் வந்து இப்படி பண்ற அவ வேலை செய்யட்டும் அப்பதான் அவளுக்கு சுகப்பிரசவம் ஆகும் என கோடீஸ்வரி சொல்கிறார். உடனே மகா ஐஸ்வர்யா உண்மையை சொல்லாமல் இருப்பதால் கோபமாகி ஐஸ்வர்யாவை பார்த்து முறைக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.