அவ அவ துண்ட காணும் துணிய காணுமுனு ஓடிக்கிட்டு இருக்கா.. உனக்கு குதூகலம் கேக்குதா? அரை டவுசரில் ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணனை விமர்சிக்கும் ரசிகர்கள்

Michaung Cyclone: சென்னையில் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு வரும் நிலையில் இந்த ரணகளத்திலும் ஷிவானி நாராயணன் குட்டை டவுசரில் ஆட்டம் போட்டு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எனவே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ஷிவானி நாராயணன் இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார். இந்த சூழலில் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நான் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உக்காந்து அழுவ செஞ்சிருவேன்.. அர்ச்சனாவை வேண்டுமென்றே வம்பு இழுக்கும் நிக்சன் -வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து ஆர்ஜே பாலாஜியின் வீட்டுல விசேஷம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

கடைசியாக இவர் நடித்திருந்த பம்பர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான மனசுக்குள் ஒரு புயல் என்கின்ற பாடலை இணைத்து மிக்ஜாம் புயலின் பொழுது மழைச்சாரலில் நனைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உக்காந்து அழுவ செஞ்சிருவேன்.. அர்ச்சனாவை வேண்டுமென்றே வம்பு இழுக்கும் நிக்சன் -வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கடுப்பில் கழுவி ஊற்றி வருகின்றனர். புயலால் வெள்ளத்தில் சிக்கி ஆயிரம் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இது இப்ப ரொம்ப முக்கியமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..