50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?.

Actress Roja Net worth: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். 90 காலகட்டத்தில் தன்னுடைய வசீகரமான உடலமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை ரோஜா.

செம்பருத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் முதல் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி, சத்யராஜ், பிரபுதேவா, சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.  இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ரோஜா திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

யாரு செட்டிங்கா.. விசித்ரா, அர்ச்சனாவின் அதிரடி முடிவு.! கரார் காட்டும் கேப்டன் தினேஷ்

நடிகை ரோஜா 1972ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஆந்திர மாநிலத் திருப்பதியில் நாகராஜா ரெட்டி மற்றும் லலிதா தம்பதியினர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர் பொலிடிக் சயின்ஸ் முடித்த நடிகை ரோஜா சினிமாவில் நடிக்க தொடர்ந்தார்.

அந்த வகையில் 1991ஆம் ஆண்டு பிரேம தப்பாஸு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி இதன் மூலம் தமிழ் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அப்படி செம்பருத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

யாரு செட்டிங்கா.. விசித்ரா, அர்ச்சனாவின் அதிரடி முடிவு.! கரார் காட்டும் கேப்டன் தினேஷ்

மேலும்  ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட ரோஜா 1999ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார் அதன் பிறகு 2009ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலகி ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்தார் தற்பொழுது எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

இவ்வாறு இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரோஜாவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.70 கோடி என்றும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் இவருக்கு சொந்தமாக பல வீடுகள் இருப்பதாகவும் அதோட மதிப்பு பல கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்