தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Ritika Singh Net worth: தமிழ் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகை ரித்திகா சிங் தற்பொழுது தலைவர் 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஃபைட்டராக பணியாற்றி வந்த ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிசுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த ரித்திகா சிங் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

என் புருஷன வளச்சி போட்ட நயன்தாரா கன்னத்தில் ஓங்கி அரையனும்… ஆவேசப்பட்ட பிரபலம்..

அப்படி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட பல நடிகர்களுடனும் இணைந்து நடித்த இவர் தற்பொழுது தலைவர் 170வது படத்தில் நடித்து வருகிறார். இன்று ரித்திகா சிங் தனது 29வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே இவருடைய புகைப்படங்கள் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வருகின்றனர்.

இந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் இடம் பெற்ற கலாபக்காரா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இப்பாடல் ரசிகர்களையும் கவர்ந்தது மேலும் விஜய் ஆண்டனி உடன் இணைந்து தமிழில் கொலை படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.

டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப் போகும் அதிரடி மாற்றம்..

இவ்வாறு தற்பொழுது தலைவர் 170 lவது படத்தில் நடித்து வரும் ரித்திகா சிங் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். இவ்வாறு சில படங்களில மட்டுமே நடித்திருந்தாலும் தற்போது 8 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரி ஆக உள்ளார் என கூறப்படுகிறது. இவ்வாறு நடிப்பதையும் தாண்டி தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் உடையவராக இருக்கும் ரித்திகா தொடர்ந்து தனது ஒர்க் அவுட் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்ட ட்ரெண்டிங்காகி வருகிறார்.