மகளுக்கு கிலோ கணக்கில் தங்கம் போட்டு அழகு பார்த்த நடிகை ராதா.. நடிப்பது மட்டுமல்லாமல் பிசினஸிலும் கலக்கும் இவருடைய சொத்துக்கள் இவ்வளவா?

Actress Radha Net worth: நடிகை ராதா சமீபத்தில் தனது மகளுக்கு கிலோ கணக்கில் தங்கம் போட்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்த நிலையில் அது குறித்த வீடியோக்கள் உன் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சூழலில் ராதாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

80 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் போட்டி போட்டு நடித்து வந்தவர்கள் தான் சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினுக்கான அந்தஸ்தை பிடித்தனர்.

சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது.. கமலின் லிப் லாக்கில் இருந்து எஸ்கேப்பான நடிகை.!

வயதான காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ராதா 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின் குழந்தைகள், குடும்பம் என பிசியாக இருந்து வந்த ராதா ஒரு கட்டத்தில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவருடைய திருமணத்தில் தனது மகளை தங்கத்தாலேயே இழைத்து இருந்தார் ராதா. மேலும் இவருடைய திருமணத்திற்கு ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. புல்லிங் குரூப்பில் இருந்து வெளியேறும் இரண்டு பேர்.! நியூ என்ட்ரி யார்?

நடிகை ராதா சினிமாவை தவிர தொழில்கள் செய்வதிலும் மிகவும் ஆர்வம் உடையவர். அப்படி 5 ஸ்டார் ஹோட்டல்ஸ், சென்னையில் அப்பார்ட்மெண்ட்ஸ், வில்லாஸ் என பல சொத்துக்களை வாங்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் திண்டுக்கல்லில் ஒரு பெரிய மில், சென்னையில் 25 ஏக்கரில் ஒரு சினிமா ஸ்டுடியோ வைத்து அதில் நாடகங்கள், நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வருவதன் மூலமும் வருமானம் குவிகிறது. இவ்வாறு இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்