படப்பிடிப்பில் இரண்டு குழந்தையும் அழைத்து வந்து நயன்தாரா போட்ட ரூல்ஸ்.! இதுல 1 லட்சம் சம்பளம் வேற.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பு நிறுவனம்..

Actress Nayanthara: சமீப காலங்களாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத அளவிற்கு வசூல் செய்து வருகிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க தயக்கம் காண்பித்து வருகின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில் தனக்கு மார்க்கெட் இல்லாத நேரத்தில் நயன்தாரா அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது.

தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

ஆனால் இப்படம் ஒரு கோடி ரூபாயை கூட வசூல் செய்யவில்லையாம். இதனை அடுத்து நெட்ப்லிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த படத்தை விற்றதால் இதன் மூலம் ஓரளவுக்கு லாபம் கிடைத்துள்ளது இவ்வாறு படமே சரியாக ஓடாத நேரத்திலும் தனது சம்பள விஷயத்தில் கறாராக இருந்து வருகிறாராம் நயன்தாரா. அதன்படி சினிமா பத்திரிகையாளர்கள் நடிகை நயன்தாரா  தயாரிப்பாளர்களுக்கு பல நெருக்கடிகள் தருவதாக கூறி வருகின்றனர்.

தற்பொழுது நயன்தாரா பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது எனவே தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஊட்டிக்கு வந்து நடிக்க முடியாது எனவே ஊட்டி மாதிரி சென்னையிலேயே செட் போடுங்க என கூறுகிறாராம்.

பிரபு தேவாவை சினிமாவில் தூக்கி விட்ட காதலன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

அதன்படி ஊட்டியை தொடர்ந்து தற்பொழுது சென்னையில் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கும் நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து வருவதால் குழந்தையையும் நயனையும் பார்ப்பதற்காக ஐந்து பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் ஐந்து பேருக்கும் தினமும் 20000 ரூபாய் சம்பளம் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக தரப்படுவதாகவும் இந்த அனைத்து செலவுகளையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.