நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான நடிகை கீர்த்தி சுரேஷ்.! இவருக்கே இப்படி ஒரு நிலமையா..

Actress Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து முன்னணி நடிகையான இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து அதிர்ச்சி கூறிய தகவலை பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் 2000ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா கேரியரை தொடங்கினார்.

இந்த வாரம் வெளியேறும் புல்லிங் குரூப் உறுப்பினர்.. சூனியக்காரி மாயாவால் வந்த வினை.!

அதன் பிறகு மலையாளத்தை தொடர்ந்து தமிழில் கதாநாயகியாக பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரும் தோல்வியினை தந்தது அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படங்களின் வெற்றியின் மூலம் தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது சாத்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான மகாநடி திரைப்படம் தான்.

விஜய்யின் லியோ உள்ளிட்ட இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ் திரைப்படங்கள்.!

இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இதற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்றார். சமீப கலங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளை தொடர்ந்து பாலிவுட்டிலும் பிசியாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து பேசி உள்ளார்.

அதாவது கல்லூரியில் படிக்கும் பொழுது தன்னுடைய தோழியுடன் நடுரோட்டில் நடந்து சென்ற பொழுது தன் மீது குடிகாரன் ஒருவர் சாய்ந்து கை வைத்ததாக கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டதாகவும் பின்னர் அவரை அடித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலர் கல்லூரி படிக்கும் பொழுது மிகவும் தைரியமாக இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதற்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.