தோனிய நம்பி வீணா போயிட்டேன்.. ஒரே படத்துல பேமஸ் ஆனா இப்படித்தான் நடக்கும்..

Actress Ivana Upset About Dhoni Movie: குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவானாவுக்கு 2018ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியான நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. தமிழில் ஹீரோயினாக நடித்த தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

நாச்சியார் கொடுத்த வெற்றியின் மூலம் பல திரைப்படங்களில் நடித்தும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்பு பெற்றார். இப்படத்தில் இவானா நடித்திருந்தாலும் இந்த படமும் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

தெரியாமல் கோலிவுட்டுக்கு வந்து விட்டோமோ என புலம்பி வந்த சூழலில் தான் இவருக்கு பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவானாவும் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமாக பிளாக்பஸ்டர் ஹெட் அடித்தது அதன் பிறகு தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவானா ஹீரோயினாக நடித்திருந்தார்.

தோனி படத்தில் நடித்தால் வேற லெவலுக்கு சென்று விடலாம் என ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வந்தார் இவானா. ஆனால் இந்த படம் படும் தோல்வியினை கொடுக்க அடுத்த பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறிய கேரக்டரில் மட்டுமே நடித்து வருகிறாராம்.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

இவ்வாறு தோனியை நம்பி மோசம் போயிட்டோமே என தனது நெருங்கிய தோழிகளிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.  தற்பொழுது ஜிவி பிரகாஷின் கள்வன் உள்ளிட்ட மேலும் சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.