‘இதயத்தை திருடாதே’ பட நடிகையா இவர்.! 30 வருடங்களுக்குப் பிறகு கம்பேக்..

Actress Girija: நடிகைகளை பொருத்தவரை தங்களது இளமையான அழகு குறைவும் வரை மட்டுமே தொடர்ந்து ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்க முடியும் அப்படி சில நடிகைகள் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருபவர்கள் உள்ளார்கள். மேலும் சிலர் சினிமாவை விட்டு விலகியவர்களும் இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்து சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகை கிரிஜா. 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரிஜா மணிரத்தினம் இயக்கத்தில் 1989ஆம் ஆண்டு வெளியான இதயத்தை திருடாதே படத்தின் மூலம் கதாநாயகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

ஐஷூ விவகாரத்தில் சிக்கிய நிக்சன்.! உண்மைகளை வைத்து மிரட்டும் மணி.. விஷ்ணுவின் முடிவு என்ன?

இப்படம் கீதாஞ்சலி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஓ பிரியா பிரியா என்ற பாடலை 90ஸ் கிட்ஸ் மறந்திருக்க முடியாது அப்படி படத்தினை போலவே பாடல்கள் மூலமும் ரசிகர்களின் மனதை கவந்தார்.

Idhayathai Thirudathe
Idhayathai Thirudathe

இவ்வாறு இப்படத்தின் வெற்றினை தொடர்ந்து மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியானது. இதயத்தை திருடாதே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கிரிஜா 2022ஆம் ஆண்டு ஹிருதயாஞ்சலி என்ற தெலுங்கு படத்திலும் 2003ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினியுடன் இணையும் மாஸ் முன்னணி நடிகர்.. தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்

இதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க தொடர்ந்தார். அப்படி, இப்பனி டப்பிடா இலியாலி என்ற கன்னட படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த கிரிஜா சமீப காலங்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவ்வாறு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் கிரிஜாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்