பாலிவுட் குயின் நடிகை தீபிகா படுகோனே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Actress Deepika Padukone: நடிகை தீபிகா படுகோன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை தீபிகா படுகோன் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 2006ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய தீபிகா படுகோன் ஹிந்தியில் ஷாருக்கான்  நினைந்து நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் இவர் கா ப்ரோடுக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி சில திரைப்படங்களை தயாரித்து வந்தார். அப்படி இரண்டு திரைப்படங்கள் தொடர்ந்து படம் தோல்வியினை சந்தித்தது.

2 மணி நேரமே தியேட்டர்ல உட்கார முடியாது.. இதில் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்த 5 திரைப்படங்கள்..

இதனை அடுத்து தீபிகா படுகோன் ஷாருக்கான் உடன் இணைந்து பதான் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் வெளியாக இதில் மிகவும் கவர்ச்சியாக தீபிகா படுகோன் நடித்திருந்ததால் பலரும் பதான் படம் ரிலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான பதான் படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த பதான் படத்தினை தொடர்ந்து ஷாருக்கான், நயன்தாரா இணைந்த நடிக்க அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு தமிழில் நடிகர் ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் விளம்பரங்கள் மற்றும் பல நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் உள்ளார்.

யார் வீட்டில பார்ட்டி எங்க வீட்ல பார்ட்டி. வனிதா வீட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்..

அப்படி இதுவரையிலும் 50க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு 38 வயது ஆகும் தீபிகா படுகோன் 2008ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தற்பொழுது தீபிகா படுகோன்வின் சொத்து மதிப்பு ரூபாய் 500 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.