பிரசாந்தின் திருடா திருடா படத்தில் நடித்த சந்திரலேகாவா இது?. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

Actress Anu Aggarwal New Look Photo: சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் தான் நடித்த சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கஷ்டம். அப்படி சினிமாவிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ஏராளமான நட்சத்திரங்கள் சினிமாவை விட்டு விலகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளனர்.

அந்த வகையில் திருடா திருடா திரைப்படத்தில் சந்திரலேகாவாக க்யூட்டான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகையின் தற்போதைய  புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

1999ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் திருடா திருடா. இத்திரைப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து ஆனந்த், அனு அகர்வால், ஹீரா, ராஜகோபால் போன்றோர்கள் இணைந்து நடிக்க ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் மேலும் ஆலயம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருடா திருடா படத்தை தயாரித்தது.

Actress Anu Aggarwal New Look Photo
Actress Anu Aggarwal New Look Photo

திருடா திருடா படத்தில் செம க்யூட்டாக நடித்திருந்த அனு அகர்வால் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடர்ந்தார். பிறகு இதன் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இவர் தான் நடித்த சில திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் இயக்குனராக இருந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டி விட்ட 5 இயக்குனர்கள்.!

இதனை அடுத்து 1996ஆம் ஆண்டு வெளியான ரிட்டன் ஆப் ஜூவல் தீஃப் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். தற்பொழுது திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் அனு அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.