என்னதான் இயக்குனராக இருந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டி விட்ட 5 இயக்குனர்கள்.!

5 directors who are famous for playing villains: இயக்குனர்களாக அறிமுகமானவர்களும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர் தான் எஸ்.ஜே சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி இயக்குனர்களாக பிரபலமாகி பிறகு வில்லனாக மிரட்டிய டாப் 5 இயக்குனர்கள் குறித்த லிஸ்ட்.

மகேந்திரன்: புகழ்வாய்ந்த தமிழ் திரை இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் விஜய்யின் தெறி திரைப்படத்தில் முரட்டு வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார்.

மனோஜ்க்கு தரமான பதிலடி கொடுத்த முத்து.! விஜயாவால் சிக்கலில் மாட்டி கொள்ள போகும் ரோகினி..!

ஆர் சுந்தர்ராஜன்: வில்லனாகவும் குணசத்திர ஹீரோவாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுந்தர்ராஜன் விஜயகாந்தின் எங்க முதலாளி திரைப்படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். தற்பொழுது இவர் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார்.

கே.எஸ் ரவிக்குமார்: தரமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி வரும் கே.எஸ் ரவிக்குமார் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடிப்பதும் வழக்கம். அப்படி இவர் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்க அண்ணன் தம்பிக்குள் பகையை வளர்த்து விடும் எதிர்மறையான கேரக்டரில் கே.எஸ் ரவிக்குமார் நடித்திருப்பார்.

பி வாசு: விஜயகாந்தின் வல்லரசு திரைப்படத்தில் விஜயகாந்துக்கு எதிராக கொடூரமான கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றது.

அடப்பாவி அர்ஜுன், சரஸ்வதி புள்ளதாச்சு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே டா…! ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படியா நடந்துப்ப.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதி..

மணிவண்ணன்: மணிவண்ணன் சத்யராஜின் தாய்மாமன் படத்தில் அரசியல்வாதியாக சத்யராஜுக்கு எதிராக பல சதிகளை செய்யும் வில்லனாக நடித்து மாஸ்காட்டி இருப்பார். தாய்மாமன் படத்தில் சத்யராஜுடன் இணைந்து கவுண்டமணி, மீனா, விஜயகுமார், செந்தில் போன்றவர்கள் நடித்திருந்தனர்.