அறிமுகமான காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள்..

Tamil Actors: சினிமாவை பொருத்தவரை எடுத்த உடனே தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் கொடுப்பது மிகவும் கடினம் அப்படி அறிமுகமாகி தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என சினிமாவின் உச்சத்தில் புகழ்பெற்று இருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் அப்பா சிறந்த இயக்குனராக இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கான ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

அப்படி இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகராக அறிமுகமான தனுஷ் தற்பொழுது இயக்குனராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமைகளை கொண்டு விளங்குகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அறிமுகமாகி தொடர்ந்து மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஒரே நடிகர் தனுஷ் தானா என்று ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சித்ரா லக்ஷ்மணன் அறிமுகமாகி தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு நடிகர்களும் இருக்கிறார்கள் என கூறினார்.

டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு கேட்காது அஜித்தை தாக்கிய போஸ் வெங்கட்.. கழுதை கதை சொல்லி பதிலடி கொடுத்த ஜான் கொக்கன்

ஜெயம் ரவி மற்றும் கார்த்தி இவர்கள் தான் அறிமுக படத்தை அடுத்து தொடர்ச்சியான ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள் என கூறினார். அந்த வகையில் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இதனை அடுத்து காதல் கொண்டேன், திருடா திருடி என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

அதேபோல்தான் நடிகர் ஜெயம் ரவியும் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தாஸ் போன்ற ஹிட் திரைப்படங்களை தந்தார். இவரை அடுத்து கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.

விஜய் பெயரை டேமேஜ் செய்த ரசிகர்.. இந்த ஒரு போட்டோ போதும்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

பருத்திவீரன் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா என வெற்றி திரைப்படங்களை தந்திருக்கும் நிலையில் அறிமுகமாகி தொடர்ச்சியாக மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் இவர்கள் மூவர் மட்டுமே வேறு யாரும் இல்லை என சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.