தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

Actress Madhavi: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் அளவிற்கு நடிகைகளால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் குட்டியென பல நடிகைகள் செட்டில் ஆகி விடுகின்றனர். அந்த வகையில் ரஜினியுடன் தில்லுமுல்லு திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை மாதவியின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை மாதவி ரஜினியின் தில்லு முல்லு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார்.

எனவே தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சுமார் 300 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த காலகட்டத்திலேயே நீச்சல் உடையில் கூட எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒருவர்.

எனவே இதன் காரணமாக பாலிவுட்டிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். 10 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த மாதவி பிறகு ஒரு காலகட்டத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அதாவது ரஜினியும் மாதவியும் நெருங்கிய நண்பர்கள் அதனால் இமயமலையில் இருக்கும் சாமியாரின் அறிவுரையின்படி மாதவி அங்கு வந்த வெளிநாட்டு நபரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

actress madhavi
actress madhavi

தற்பொழுது இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வரும் இவர் சமீபத்தில் தனது 27வது திருமண நாளை கொண்டாடினார். அப்பொழுது எடுக்கப்பட்ட இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் தில்லு முல்லு படத்தில் நடித்த மாதவியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும் இவருடைய அழகிய புகைப்படம் இதோ.