விஜய் பெயரை டேமேஜ் செய்த ரசிகர்.. இந்த ஒரு போட்டோ போதும்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Vijay : திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி பின் அரசியலில் இறங்குகின்றனர் நடிகர்கள் அப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல், சரத்குமார் ஆகியவர்களைதொடர்ந்து சினிமாவிலிருந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுக்க இருப்பவர் தான் தளபதி விஜய்.

இவர் தன்னுடைய ரசிகர்களை மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட புதிய நூலகம் ஒன்றை திறந்திருந்த நிலையில் தற்பொழுது சென்னை உலுக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதை அறிந்த பலரும் முன் வந்து உதவினார்.

இவளா ஒரு பொண்ணா? பூர்ணிமாவிடம் வழிந்து கொண்டிருந்த விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா..

அப்படி கே பி ஒய் பாலா 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார் அஜித் தன்னுடைய நண்பர்கள் மூலம் பல உதவிகளை செய்தார் இதுபோல அதிமுக, திமுக கட்சியினரும் பல உதவிகளை செய்து செய்து வந்தனர் கார்த்தி, சூர்யா  போன்றவர்களும் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து உதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் விஜயின் மக்கள் இயக்கத்தினரும் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிதி உதவி செய்ததோடு அவர்களுக்கு உணவும்  வழங்கினார். இந்த நிலையில் இசிஆர் சரவணன் முதியோர் இல்லத்தில் பசியால் அவதிப்பட்ட சில வயதானவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.

வெளியேறியவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன்.. பூர்ணிமாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Vijay
Vijay

ஆனால் அதிலும் ஒருவர் நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு உணவு பரிமாறுவதற்கு முன்பு இவர்தான் உணவளித்தார் என்பது போல விஜய் புகைப்படத்தை காட்டி உள்ளார் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பலரும் விமர்சிக்கின்றனர். ப்ளூ சட்டை மாறனும் உங்களுக்கு உணவு கொடுப்பவர் உங்கள் விஜய் என ட்ரோல் செய்துள்ளார். இதை பார்த்த தளபதி ரசிகர்கள் நல்லது பண்ண எதுக்கு விளம்பரம் விஜய் அண்ணாவுக்கு கெட்ட பெயர் வாங்கி தராதீங்க..