அடேய் புத்தாண்டுக்காக பொத்தி பொத்தி வைத்திருந்த அப்டேட்டை இப்படி லீக் பண்ணிட்டீங்களே.. தளபதி 68 புலம்பலில் வெங்கட் பிரபு..

Thalapathy 68 Update: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்திற்கான தலைப்பு குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நடிகர் விஜய் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார்.

அந்த வகையில் லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி 68 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌவுத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, பிரசாத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர்.

இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இதற்காக இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கும் விஜய்க்கு டி ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்த வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். மேலும் சில காட்சிகளுக்காகவே பல கோடி செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தாய்லாந்து சென்ற படக்குழு அதிரடியான ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கிவிட்டு சென்னை திரும்பி உள்ளனர். இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக வைக்கப்பட்டுள்ள தலைப்பு ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி பாஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மெகா ஹிட் இயக்குனரை இரண்டு முறை நிராகரித்த தளபதி விஜய்… ஆனால் இந்த முறை..

இது உறுதியான டைட்டில் இல்லையாம் மேலும் இரண்டு டைட்டில்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டைட்டில்களில் எது உறுதியாகிறது அது புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம். இவ்வாறு தளபதி 68 படத்திற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் மூன்று டைட்டில்கள் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் லீக்காகி உள்ளது.