மெகா ஹிட் இயக்குனரை இரண்டு முறை நிராகரித்த தளபதி விஜய்… ஆனால் இந்த முறை..

Actor Vijay: தளபதி விஜய்யிடம் பிரபல இயக்குனர் ஒருவர் இரண்டு முறை கதை கூறியும் ஆனால் விஜய் நிராகரித்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி நடிகர் விஜய் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது இதனை அடுத்து சமீபத்தில் லியோ வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவ்வாறு இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

KPY பாலா மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க காரணமே தாடி பாலாஜி தான்.? வெளிவந்த உண்மை

இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் இரண்டு முறை நிராகரித்த இயக்குனர் வேறு யாரும் இல்லை கார்த்திக் சுப்புராஜ் தான். அதாவது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இரண்டு முறை நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கதை கூறியுள்ளாராம்.

ஆனால் கதையில் சில குளறுபடிகள் இருந்ததால் விஜய் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் இணைய முடியாமல் போனது இதனை அடுத்து விரைவில் இணைந்து படம் உருவாக்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி தளபதி 68 பாடத்திற்கு பிறகு தளபதி நடிக்க இருக்கும் தளபதி 69வது படத்தை சன் பிரிக்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்துக் கொண்ட சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா..

ஆனால் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட்டை படக் குழுவினர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.