இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

Ajith Kumar: 2023ஆம் ஆண்டு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தியது சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படி இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொண்டனர். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், சிவகார்த்திகேயனின் மாவீரன், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2, ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ போன்ற அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவ்வாறு அனைத்து முன்னணி நடிகர்களும் தொடர்ந்து தங்களது பெஸ்ட் கொடுத்து வரும் நிலையில் கடுமையான உழைப்பை காட்டி வருகிறார்கள் அந்த வகையில் டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

KPY பாலா மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க காரணமே தாடி பாலாஜி தான்.? வெளிவந்த உண்மை

5. சிவகார்த்திகேயன்: வித்தியாசமான லுக்குடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காமெடி, ஆக்சன் என இருந்த இப்படத்தினை குடும்பத்தினர்களுடன் திரையரங்கிற்கு சென்று ரசிகர்கள் பார்த்து வந்தனர். இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாக உள்ளது.

4. தனுஷ்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் கூட்டணியில் வெளியான வாத்தி படமும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. தற்பொழுது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. அஜித்: ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியார் இணைந்து நடித்த துணிவு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி 200 கோடி வரை வசூல் செய்தது. தற்பொழுது அஜித் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புருஷன், மாமியாரே தனக்கு எதிராக நிற்கும் போது மகாவிற்கு சப்போர்ட் பண்ணிய வேதாச்சலம்.. கடுப்பான கௌதம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

2. விஜய்: வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

1. ரஜினிகாந்த்: 72 வயதிலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து கலக்கி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அப்படி சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றினை பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர்.