அரசியல் எனக்கு ஆகவே ஆகாது… மாட்டிக்கினாறு ஒருத்தர்.. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் விஜயின் பழைய வீடியோ..

Actor Vijay old interview viral: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அரசியல் குறித்து விஜய் பேசிய த்ரோபக் வீடியோவை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.

நம்முடைய மாநிலத்திற்கு மாற்று அரசியல் தேவைப்படுகிறது எனவே விஜய்யால் நல்லது நடக்கும் என எதிர்பார்த்து வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயர் விஜய் அறிவித்திருக்கும் நிலையில் அதில் அரசியல் எனது வேட்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

இவ்வாறு அதன்படி பல ஆண்டுகளாக தான் அரசியல் வருவது குறித்து விஜய் சிந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் பேசிய த்ரோபேக் வீடியோவை நெட்டிசன்கள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அதாவது விஜய் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா திரைப்படத்தை ஏ.எல் விஜய் இயக்கினார். தலைவா என்று டைட்டில் காரணமாக இந்த படம் பல சிக்கல்களை சந்தித்தது மேலும் அந்த சமயத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் தலைவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட பொழுது தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்தார். அதில் விஜய்யிடம் தலைவா திரைப்படம் நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு சொல்லாம சொல்லுதா என்ன கேட்கப்பட்டது அந்த கேள்வியை கேட்டதுமே சிரித்து விட்டு பிறகு விஜய் தலைவா படத்தில் அப்படி சொல்லல நானும் அது உண்மைன்னு சொல்லல நீங்க தான் இந்த மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுவரை நான் எங்குமே அரசியலுக்கு வருவேன் என சொன்னது கிடையாது எனக்கு அதில் விருப்பமும் இல்லை ஆனால் சில பத்திரிகைகளில் நான் அரசியலுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியானதை பார்த்தேன் அப்பொழுதுதான் எனக்கே அது தெரியவந்தது அதாவது நான் அரசியலுக்கு வருவேன் என பலரும் பேசிக்கொள்வதை.

மைக் மோகனை உருகி உருகி ஒருதலையாக காதலித்த நடிகை.! 3 குழந்தைக்கு தாயான அந்த நடிகை யார்.! வெளியான ரகசியம்..

ஆனால் அது தொடர்ந்து வருவதை பார்த்து நானே அந்த செய்தி வாசிப்பாளர்களை அழைத்து பேசி இது போன்ற செய்திகள் எல்லாம் தேவையில்லை எனவும் கூறினேன் எனக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமே விருப்பம் அரசியலில் சுத்தமாக விருப்பமே கிடையாது. மக்களின் கலைஞனாக எல்லோருக்கும் பொதுவான நடிகனாக இருக்க மட்டுமே ஆசை என விஜய் கூறியுள்ளார். இவ்வாறு தலைவா படம் வெளியான பொழுது அரசியலில் விருப்பமில்லை எனக் கூறிய விஜய் இப்பொழுது ஏன் இப்படி மொத்தமாக மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.