நான்தான் விஜய்யை வைத்து இயக்குவேன் தளபதி 69-க்காக போட்டி போடும் இயக்குனர்கள்.. தளபதி எடுத்த அதிரடி முடிவு..

Thalapathy 69: தளபதி 69வது படத்தினை இயக்க ஏராளமான முன்னணி இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆனால் இதற்கு விஜய் வேறு ஒரு திட்டமைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வாரிசு படத்தினை தொடர்ந்து கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மெண்ட் படமாக உருவானது இதில் சரத்குமார், ஷாம், ராஸ்மிகா, பிரகாஷ் ராஜ் அவர்கள் இணைந்து நடிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். ஆனால் சொல்லும் அளவிற்கு வாரிசு வொர்க் அவுட் ஆகவில்லை இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக லியோ வெளியானது.

OTT ல் இந்த வாரம் மாஸ் காட்டப் போகும் 5 திரைப்படங்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த யோகி பாபு

இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என்ற இரண்டு விதமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தார். லியோ படத்தின் வெற்றினை தொடர்ந்து வெங்கட் பிரபு உடன் இணைந்து தளபதி 68 படத்தில் பிசியாக இருந்து வருகிறார். விஜய் இப்படத்திலும் இரண்டு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது அப்பா, மகன் என இரண்டு விதமான கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் தளபதி 68 படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் விஜய் வேறு ஒரு பிளான் வைத்திருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

ரஜினி, ஸ்ரீதேவி அருகில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? அட இவர் அந்த நடிகரா..

அதாவது, தளபதி 69வது படத்தின் இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் விஜய் தளபதி 68 படத்தை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த கேப்பில் தான் மக்கள் பணி மற்றும் அரசியல் பணியை செய்ய இருக்கிறாராம் எனவே 2026ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.