ரஜினி, ஸ்ரீதேவி அருகில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? அட இவர் அந்த நடிகரா..

Actor Rajinikanth: ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியுடன் இருக்கும் இந்த குழந்தை தற்பொழுது பிரபல நடிகர் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் முன்னணி பிரபலங்களாக கலக்கி வருபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி ரஜினி ஸ்ரீதேவியுடன் இருக்கும் இந்த குழந்தை குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் 73 வயதை கடந்த பிறகும் தனது மவுசு குறையாமல் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த வார டாப் 10 சீரியல்கள்.. கயல் தொடரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த புதிய சீரியல்

இதனை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். அப்படி இவர்களுடைய கூட்டணியில் 1986ஆம் ஆண்டு வெளியான பகவன் தாத்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபல ஹிந்தி நடிகர் ஒருவர் நடித்துள்ளார்.

actor rajinikanth
actor rajinikanth

ஆம், அது வேறு யாருமில்லை ஹிந்தியில் முன்னணி நடிகராக கலக்கி வரும் ஹிரித்திக் ரோஷன் தான் இந்த படத்தில் ரஜினி, ஸ்ரீ தேவிவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தினை ஹிரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

actor rajinikanth
actor rajinikanth

இவ்வாறு இந்த படப்பிடிப்பின் பொழுது ரஜினி ஸ்ரீதேவியுடன் ஹிரித்திக் ரோஷன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹிரித்திக் ரோஷன் தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.