கையில் துப்பாக்கி தெறிக்க வெளியானது தளபதி 68 செகண்ட் லுக் போஸ்டர்..

Goat movie second look: தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்னுடன் கூடிய டைட்டிலை படக்குழுவினர்கள் வெளியிட்டனர்.

இப்படத்தின் டைட்டில் கோட் எனவும் விஜய் இரட்டைக் கேரக்டரில் நடிப்பதையும் உறுதி செய்தார்கள். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்டேட்டுகளும் சமீப காலங்களாக வெளியாக தொடங்கியுள்ளது.

வருங்கால மருமகனுடன் நியூ இயர் கொண்டாடிய கமலஹாசன்..? தம்பி அப்பா முன்னாடியே பொண்ணு மேல கைய போடுறியே..

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா போன்றவர்கள் நடித்து வருகின்றனர். விஜய் அப்பா, மகன் என இரட்டை கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது எனவே விஜய் இளம் வயதில் காண்பிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதாம் எனவே சில காட்சிகளுக்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவழிக்கப் படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய்யின் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கூடிய டைட்டில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானதை அடுத்து இன்று செகண்ட் லுக் போஸ்டரை மாலை 6 மணி அளவில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதேபோல் கோட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

என் அப்பா விட்டுட்டு போனத நான் தொடர்வேன்… சமாதிக்கு முன்பே களத்தில் குதித்த கேப்டனின் இரண்டு சிங்க குட்டிகள்…

செகண்ட் லுக் போஸ்டரில் இரட்டை கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.