2024 குறி வைக்கும் டாப் ஹீரோக்கள்.. சபாஷ் சரியான போட்டி..

Tamil Actors: 2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. எனவே மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பொன்னாண்டாக அமைந்திருந்தாலும் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை. இவர்கள் இருவருமே தரமான படங்களில் நடித்து வருகின்றனர் மேலும் எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது குறித்த பட்டியலை பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதன்படி அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தசே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படமும் இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் நடிக்க உள்ளார். இந்த ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.

என் அப்பா விட்டுட்டு போனத நான் தொடர்வேன்… சமாதிக்கு முன்பே களத்தில் குதித்த கேப்டனின் இரண்டு சிங்க குட்டிகள்…

கமல்ஹாசன்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இதே ஆண்டில் இந்தியன் 3 கூட வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படமும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கிடையில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள அவரது 233வது படம் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்: 2023ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு, லியோ இரண்டு திரைப்படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்தது இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

அஜித்: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இந்த மாதம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா: கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை இருப்பினும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சரித்திர படமாக உருவாகி வரும் கங்குவா சிவா இயக்கி வருகிறார் இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

விக்ரம்: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தினை பா ரஞ்சித் இயக்க மாறுபட்ட தோற்றத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனா நடித்துள்ளனர் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் தனது 62வது திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு வீடியோவும் ஏற்கனவே வெளியாகியுள்ளது மேலும் கடந்த ஆண்டு வெளியாக இருந்த துருவ நட்சத்திர படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூ பீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்.. வைரலாகும் புகைப்படங்கள்..

தனுஷ்: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷன்  போன்றோர்கள் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிறகு தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி அவரே நடிக்க உள்ளார். பிறகு தனுஷ் இயக்குனராக மட்டும் பணியாற்றி இருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படமும் இந்த ஆண்டு வெளியாகிறது.

சிவகார்த்திகேயன்: 8 வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 21வது படத்தின் நடிக்க உள்ளார்.

கார்த்தி: 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரன் கூட்டணியில் பெயரிடாத படம் உருவாகி வரும் நிலையில் இப்படம் முதலில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது இப்படத்திற்கு வாத்தியாரே என தலைப்பு வைத்துள்ளார்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்.

விஜய் சேதுபதி: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி  இணைந்து நடித்த விடுதலை 2 இந்த ஆண்டு வெளியாகிறது. மேலும் மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படமும் வெளியாகும். ஹிந்தியில் மேரி கிறிஸ்துமஸ் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை இயக்கிய ஆறுமுகம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

டூ பீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்.. வைரலாகும் புகைப்படங்கள்..

விஷால்: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி தொடர்ந்து இந்த ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த வரும் ரத்னம் படம் வெளியாக உள்ளது.

ஜெயம் ரவி: இந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் சைரன், பிரதர் ஆகிய இரண்டு படங்கள அடுத்தடுத்து வெளியாகலாம் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் தக் லைப் படத்திலும் ஜெயம் ரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படமும் இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.