நடிக்காமலேயே கைவிடப்பட்ட சூர்யாவின் 3 திரைப்படங்கள்… எதிர்காலத்தில் இந்த திரைப்படங்களில் ஒருவேளை நடிப்பாரோ..

Actor Surya Dropped Movies List: தனது சிறந்த நடிப்பு திறமையினால் வித்தியாசமான கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகர் சூர்யா கைவிட்ட மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சமீபத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வணங்கான் படம் கைவிடப்பட்டது. இதில் பாலா நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் சூர்யாவிற்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெகு தொலைவில் ரூம் புக் செய்ததாகவும் இதனால் தொடர்ந்து இவர்களுக்கிடையே சில மனக்கசப்புகள் ஏற்பட சூரியா இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இவ்வாறு இந்த படம் மட்டுமல்லாமல் வேறு 3 திரைப்படங்களில் இருந்தும் சூர்யா விலகிவுள்ளார்.

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

1.அருவா: இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா காம்போவில் அருவா என்ற திரைப்படம் உருவாகுவதாக இருந்தது. ஆனால் கொரோனா லாக் டவுன் போன்ற பிரச்சனையினால் இந்த படம் கைவிடப்பட்டது அதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பை இதுவரை தொடங்கவில்லை.

2. துப்பறியும் ஆனந்தன்: வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யா கௌதம் மேனன் கூட்டணியில் துப்பறியும் ஆனந்தன் என்ற படம் உருவாகுவதாக இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியானது ஆனால் அதன் பிறகு இந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

பணத்தை திருப்பி கொடுக்க சொன்ன பாண்டியன்.! முடியாது என கூறிய கதிர்… என்னால் எதுக்கு சண்டை என உண்மையை சொல்ல வரும் ராஜி…

1. இரும்பு கை மாயாவி: விக்ரம் படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இரும்புக்கை மாயாவி என்ற படம் உருவாக இருந்தது. இந்த படம் குறித்த போஸ்டர்கள் போன்றவை வெளியான நிலையில் அதன் பிறகு இந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.