பாலிவுட் பாட்ஷானா சும்மாவா.. 58 வயதில் பல கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் ஷாருக்கான்.? அதுக்குன்னு இவ்வளவா..

Shah Rukh Khan Net worth: பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஷாருக்கான் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அதுவும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அப்படி ஏராளமான விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான பதான் திரைப்படம் ரூபாய் 1050 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் தொடர்ந்து தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்க சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார்.

குட்டையான உடையில் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா.. அதுக்குன்னு இவ்வளவு டைட்டாவா.!

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருந்த பதான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்து வந்தது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பிறகு எதிர்ப்புகளுக்கு இடையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தினை தொடர்ந்து கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் வெளியானது. இப்படத்தினை அட்லீ இயக்க விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி 1000 கோடி வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து தெறித்து ஓடிய விசித்ரா.! விதி மீறியதால் நடக்கப்போவது என்ன.?

இந்த சூழலில் இன்று ஷாருக்கான் தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் மொத்தம் 6000 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராம். மொத்தம் 12 சொகுசு கார்களையும், மும்பை, லண்டன், துபாய் ஆகிய இடங்களில் மூன்று பங்களாவையும் வைத்துள்ளாராம்.