4 மெகா ஹிட் திரைப்படத்தை தவறவிட்ட சத்தியராஜ்.! லிஸ்டில் இடம் பிடித்த கமல், அஜித், சூர்யா திரைப்படம்..

Actor Sathya Raj Rejected 4 Movies: வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வந்தவர்தான் நடிகர் சத்யராஜ். 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் தற்பொழுது வயதான காரணத்தினால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தலைகனத்தால் சத்யராஜ் தவறவிட்ட 4 பிளாக்பஸ்டர்  திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

4. இயற்கை: 2003ஆம் ஆண்டு ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா போன்றவர்களின் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தில் பசுபதி அவர்கள் நடித்த ஃபாதர் கேரக்டரில் முதலில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது பிறகு சில காரணங்களால் சத்யராஜ் இந்த படத்திலிருந்து விலக பசுபதி நடித்துள்ளார்.

சிலுக்கு இன்னும் சாகலடா..? எல்லை மீறிய ரித்திகா சிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள் கமெண்ட்.!

3. காக்க காக்க: 2003ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் காக்க காக்க. இப்படத்தில் ஜீவன் நடித்த பாண்டியன் கேரக்டர் முதலில் சத்யராஜுக்கு தான் போய் உள்ளது.

2. தீனா: அஜித் குமார் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான தீனா திரைப்படத்தில் முதலில் அஜித்துக்கு அண்ணனாக வைப்பதற்கான வாய்ப்பு  சத்யராஜுக்கு தான் சென்றுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்ததால் அண்ணனாக நடிப்பதற்கு மறுத்தாராம்.

என் ராசாவை இதுவரை நெஞ்சில் சுமந்தேன்.. இனிமேல் கையிலையும் சுமப்பேன்… வைரலாகும் பிரேமலதா டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ

1. நாயகன்: 1987ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் நாயகன். இப்படத்தில் வேலு நாயகன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் தான் நடிக்க இருந்தாராம். அதன் பிறகு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சத்யராஜ் விலக கமல்ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.