சந்தானத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் பேட்டி.! 30 கோடி வரை வளரணும்..

Actor Santhanam Salary: காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித் திரையில் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் தான் சந்தானம் காமெடி நடிகராக அறிமுகமானதிலிருந்து தற்போது ஹீரோவாக வளர்ச்சியை அடைந்திருப்பது வரையிலும் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சந்தானத்தின் படங்களை ரசிகர்கள் விமர்சித்து வந்தாலும் சமீப காலங்களாக இவருடைய படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இவருடைய படம் அமைந்திருப்பதனால் ரசிகர்கள் சந்தானத்தின் படங்களை கொண்டாடி வருகின்றனர்.

இது எச்சரிக்கை இல்லை கட்டளை.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 8 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அப்படி தற்பொழுது இவர் கல்யாண் இயக்கத்தில் ’80ஸ் பில்டப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது எனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.இ ஞானவேல் ராஜா ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தனது தயாரிப்பில் தான் முதன்முறையாக நடித்ததாகவும் கூறியுள்ளார்.

விசித்ராவை மரியாதை இல்லாமல் பேசியதற்கு நிக்சனை சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்.!

அதன்படி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது, சில்லுனு ஒரு காதல் படத்தில் சந்தானம் சாருக்கு ஒன்றே முக்கால் லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறேன். அப்புறம் 18 லட்சம் கொடுத்து இருக்கிறேன், 56 லட்சம் கொடுத்திருக்கிறேன், ஒரு கொடியே 25 லட்சம் கொடுத்து இருக்கிறேன், இப்ப மூன்று கோடி கொடுத்து இருக்கிறேன் இன்னும் நான் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிற அளவுக்கு சந்தானம் பிரதருக்கு வளர்ச்சி வரணும் அதையும் தாண்டி அவருடைய பயணத்தில நானும் போகணும்னு ஆண்டவனை வேண்டுகிறேன் என்றார்.