விசித்ராவை மரியாதை இல்லாமல் பேசியதற்கு நிக்சனை சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்.!

Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து சுவாரசியமான நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கமல்ஹாசன் சூனியக்காரி டீமை சொல்லும் அளவிற்கு தட்டிக் கேட்கவில்லை என ரசிகர்கள் கூறி வந்தனர். இதனை அடுத்து இந்த வாரம் சனி கிழமையான இன்று நிக்சன், மாயா என அனைவரையும் கமல் வச்சு செய்திருப்பது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோக்களில் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7ல் மூத்த போட்டியாளராக விசித்ரா இருந்து வருகிறார். எப்பொழுதும் தனக்கான மரியாதையை அனைவரும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் அனைவரிடமும் அன்பாக பழகியதால் இவருடைய அன்பு மிகவும் பொய்யானது என வேண்டுமென்றே மரியாதை தராமல் நிக்சன், மாயா போன்றவர்கள் டார்கெட் செய்து வருகின்றனர்.

சொந்தமாக ஜெட், 100 கோடி பங்களா என்று கோடியில் புரளும் நயன்தாரா.! லேடி சூப்பர் ஸ்டாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதோட மட்டுமல்லாமல் அர்ச்சனாவையும் விசித்ராவையும் டார்கெட் செய்து அனைவரும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஐஷூ எலிமினேட் ஆனதற்கு காரணம் நிக்சன் தான் என்று விசித்ரா, அர்ச்சனா தங்களது கருத்துக்களை சிலரிடம் கூறினார்கள். இதனைக் கேட்ட மாயா நிக்சனை ஏத்திவிட்டு விசித்ராவிடம் சண்டை போட வைத்தார்.

இந்நிலையில் இன்றைய 3வது ப்ரோமோவில் கமலிடம் நான் உங்கள விசித்ரா மேம்னு கூப்பிட்டா நீங்க நிக்சன் சார்ன்னு கூப்பிடுவீங்களான்னு கேட்டாரு அதனால நானு இப்ப நிக்சன் சார் என்று தான் சார் கூப்பிடுறேன் என்று கூறுகிறார். உடனே நிக்சன் என்ன சார் என்று கூப்பிடுங்கள் என்று நான் சொல்லவே இல்லை என சொல்ல கமல் நீங்க சொன்னதை நான் பார்த்தேன் எங்க எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு உங்களுக்கு தப்பாவே தோணலையா என்று கேட்கிறார்.

சொந்தமாக ஜெட், 100 கோடி பங்களா என்று கோடியில் புரளும் நயன்தாரா.! லேடி சூப்பர் ஸ்டாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஐஷு எலிமினேட் ஆனதற்கு காரணம் நான் என்று சொல்றாரு என கூற கமல் அப்படி நினைக்கிறீங்களா நீங்க என்று நிக்சனிடம் கேட்கிறார். இந்த கோபம் தான் சார் என்கிட்டயும் காமிச்சாரு என்று விசித்ரா சொல்ல கமல் அப்படி கோபப்பட்டிங்களா நிக்சன் நீங்க, புரிய வைக்க நான் ட்ரை பண்ணனுமா என்று கேட்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் மக்களின் கைத்தட்டல்களும் கமலின் கேள்வினாலும் மிரண்டு போய் உள்ளார் நிக்சன்.