உயிர், உலக்குடன் பிறந்த நாளைக் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரல் குடும்ப புகைப்படம்..

Nayanthara Birthday: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு சினிமாவில் மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் மிகவும் பிசியாக இருந்தவர். விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்த நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்த நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். எனவே இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மற்ற வேலைகளை விட தனது குழந்தைகளுடன் அதிக நேரம் கழித்து வருகின்றனர்.

சொந்தமாக ஜெட், 100 கோடி பங்களா என்று கோடியில் புரளும் நயன்தாரா.! லேடி சூப்பர் ஸ்டாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பண்டிகை நாட்களில் தனது குழந்தையுடன் கொண்டாடும் குடும்ப புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இன்று நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்கள் உயிர், உலக் ஆகியோர்களுடன் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிவரும் நிலையில் அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

actress nayanthara birthday
actress nayanthara birthday

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வசமாக சிக்கிய சூனியக்காரி.. உண்மையை உளறிய கூல் சுரேஷ்.! விசித்ராவிற்கு கிடைத்த கைதட்டல்கள்

கடைசியாக வெளியான ஜவான் படத்தின் வெற்றினை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா அதே போல் 9skin என்ற ரூ.100 கோடி முதலீட்டில் அழகு சாதன தொழிலையும் தொடங்கியுள்ளார்.